தஞ்சாவூர் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில்
தஞ்சாவூர் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் ஒன்றாகும்.
அமைவிடம்
தொகுஇக்கோயில் பெரிய கோயிலின் இடப்புறம் உள்ள சிவகங்கைத் தோட்டத்தில் உள்ளே செல்லும்போது தோட்டத்தின் இடது புறத்தில் அமைந்துள்ளது.
மூலவர்
தொகுமூலவராக சஞ்சீவி ஆஞ்சநேயர் நின்ற நிலையில் உள்ளார். நுழைவாயில், கருவறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இக்கோயில் உள்ளது. வாயிலின் மேல் உள்ள சிறிய கோபுரத்தில் ராமர், லட்சுமணர், அனுமார் நின்ற நிலையில் உள்ளனர். அடுத்த தளத்தில் அனுமார் நின்ற நிலையில் உள்ளார்.
அமைப்பு
தொகுகோட்டையின் வடமேற்கில், வாயு மூலையில் வாயுவின் மைந்ததனான அனுமாருக்கு கோயில் அமைந்துள்ளது. இவர் சஞ்சீவிராயர் என்று அழைக்கப்படுகிறார். கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளதால் அவர் திறமையும் வலிமையும் தருவார் என்று நம்புகின்றனர். மூலவர் கிழக்கு நோக்கிய நிலையில் சுமார் மூன்றரை அடி உயரத்தில் உள்ளார்.இடது கரத்தில் சஞ்சீவி மலையும், வலது கரம் அபய முத்திரையுடனும் உள்ளது. கரங்களில் கங்கணமும், புஜங்களில் அங்கதமும், மார்பில் முத்து மணிமாலை, பதக்கத்துடன் கூடிய மணி மாலை, முப்புரி நூல் ஆகியவையும் காணப்படுகின்றன. கச்சம் அணிந்துள்ள அவருடைய தலக்கு மேல் சுருண்டு எழுந்துள்ள வாலின் நுனியில் சிறிய மணி காணப்படுகிறது. காலில் தண்டை உள்ளது. [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ தஞ்சாவூர் அனுமார் கோயில்கள், வாயுசுதா வெளியீடு, தில்லி 110 092