தஞ்சாவூர் திரௌபதியம்மன் கோயில்

தஞ்சாவூர் திரௌபதியம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் உள்ள அம்மன் கோயில்களில் ஒன்றாகும்.

தஞ்சாவூர் திரௌபதியம்மன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர் மாவட்டம்
அமைவு:தஞ்சாவூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:திரௌபதியம்மன்

அமைவிடம் தொகு

இக்கோயில் பூமாலை வைத்தியநாதர் கோயிலை அடுத்து சற்று தொலைவில் திரௌபதியம்மன் கோயில் தெருவில் நாகநாதசுவாமி கோயிலுக்கு முன்பாக அமைந்துள்ளது.

அமைப்பு தொகு

நுழைவாயிலில் சிறிய ராஜகோபுரம் உள்ளது. இக்கோயிலின் மூலவர் திரௌபதியம்மன் ஆவார். இக்கோயிலின் முன் மண்டபத்தில் காளியம்மன், செல்வ விநாயகர், ராதை கிருஷ்ணன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. அடுத்து பஞ்ச பாண்டவர்கள், அரவான் இம்மண்டபத்தில் உள்ளார். வெளிச்சுற்றில் தட்சிணாமூர்த்தி, சியாமளாதேவி அம்மன் ஆகியோர் உள்ளனர். மண்டபத்தில் காளியம்மன், விநாயகர் ஞானப்பழம் பெறல், விநாயகர், ராதை கிருஷ்ணன், திரௌபதி, பிமன் பலத்தை அனுமன் சோதித்தல், தெள்வானை திருமணம், தந்தைக்கு உபதேசம், வள்ளி திருமணம், கீதா உபதேசம், அருச்சுனன் பாசுபதம் பெறல் போன்ற பல ஓவியங்கள் இம்மண்டபத்தின் மேற்கூரையில் வரையப்பட்டுள்ளன.

குடமுழுக்கு தொகு

11 செப்டம்பர் 2008இல் இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டு காணப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு