தஞ்சாவூர் தீர்த்த சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில்
தஞ்சாவூர் தீர்த்த சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் ஒன்றாகும்.
அமைவிடம்
தொகுஇக்கோயில் தஞ்சாவூரில் அய்யங்குளம் தென் கரையில் அமைந்துள்ளது.
தேவஸ்தான கோயில்
தொகுதஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2]
மூலவர்
தொகுமூலவராக ஆஞ்சநேயர் நின்ற நிலையில் உள்ளார். மிகச்சிறிய கோயிலாக உள்ளது. நுழைவாயில், கருவறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அய்யன்குளத்தின் தென்கரையில் இக்கோயில் உள்ளது. குளத்தின் தென்கரையில் படிக்கட்டுகளில் இறங்கி இடது புறம் சென்றால் இக்கோயிலை அடையலாம்.
அமைப்பு
தொகுதீர்த்தக் கரையில் இருப்பதால் இவர் தீர்த்த சஞ்சீவி என அழைக்கப்படுகிறார். சிறிய சன்னதி படித்துறைக்கு மேல் கிழக்கு நோக்கிய நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் என்பதைவிட சிறிய சன்னதி எனலாம். மூலவர் கிழக்கு நோக்கிய நிலையில் புடைப்புச் சிற்பமாக உள்ளார். அவரது இடது பாதம் வடக்கு நோக்கியும், வலக்குதில் சற்றே உயர்ந்து பாதம் வடக்கு நோக்கிய நிலையிலும் காணப்படுகின்றன. பாதங்களில் தண்டை அணிந்துள்ளார். இரு கரங்களிலும் கங்கணமும், அங்கதமும் காணப்படுகின்றன. இடது கரம் இடது துடையில் அழுந்திய நிலையில் தாமரைத் தண்டினைப் பிடித்துக்கொண்டுள்ளது. வலது கரம் அபய முத்திரையுடன் உள்ளது. பரந்த மார்பு, நீண்ட முத்து மணி மாலை, துளசி மாலை, முப்புரி நூலுடன், கழுத்தை ஒட்டி அழகான ஒட்டிகையுடன் உள்ளார். தலையைச் சுற்றி மணிச்சரம் காணப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997 வ.எண்.27
- ↑ J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur Sl.No.27
- ↑ தஞ்சாவூர் அனுமார் கோயில்கள், வாயுசுதா வெளியீடு, தில்லி 110 092