தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம்

தென்னகப் பண்பாட்டு மையம் (South Zone Cultural Centre) இந்தியப் பண்பாட்டின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட பல பிராந்திய பண்பாட்டு மையங்களில் இதுவும் ஒன்றாகும்.[1][2] இந்தியப் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக இது செயல்படுகிறது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் நகரில் தென்னகப் பண்பாட்டு மையம் என்ற பெயரில் இது அமைந்துள்ளது.[3] தென்னக பன்பாட்டு மையத்தில் அலுவல்வழி தலைவர் தமிழ்நாட்டின் ஆளுநர் (இந்தியா) ஆவார்.

தென்னகப் பண்பாட்டு மையம்
உருவாக்கம்1986-7
வகைபண்பாட்டு மண்டல மையம்
நோக்கம்கலையினையும் பன்பாட்டினையும் பாதுகாத்து, மேம்படுத்தி, கற்பித்தல்
தலைமையகம்
வலைத்தளம்www.szccindia.org

நோக்கம்

தொகு

மண்டலத்தின் பூர்வீக பண்பாட்டை மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மக்களுக்கும் வசதியற்றவர்களுக்கும் நெருக்கமாகக் கொண்டுவரவும், அவர்கள் நம் நாட்டின் பண்பாட்டை புரிந்துகொள்வதையும் அனுபவிப்பதையும் நோக்கமாக கொண்டு இம்மையம் நிறுவப்பட்டது. இம்மையம் நாட்டின் பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் மரபுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுவது மட்டுமல்லாமல், உணர்வுபூர்வமாகவும் ஒருங்கிணைக்கவும் செய்கிறது. நாட்டியம், நாடகம், இசை மற்றும் கலை அனைத்தையும் ஒருங்கிணைத்து நமது பண்பாட்டின் ஒவ்வொரு அம்சமும் மண்டல கலாச்சார மையங்கள் மூலம் உருவாக்க வேண்டும் என்பது முக்கியமான நோக்கமாகும். இந்த தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப இங்கு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.[4][5] அவை:

  • கலை விழாக்கள் நடத்துதல்
  • பாரம்பரி கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக விருது வழங்குதல்
  • நாட்டுப்புற கலை விழா நடத்தி நாட்டுப்புற கலைகளை மேம்படுத்துதல்
  • கலைப் போட்டி நடத்துதல்
  • கலைக் கண்காட்சி நடத்துதல்

பணிகள்

தொகு

தென்மண்டல பண்பாட்டு மையத்தின் பணியாவது

  • இந்தியாவின் பாரம்பரியத்தை பாதுகாப்பது
  • இந்தியாவின் பாரம்பரிய பண்பாட்டைப் பாதுகாப்பது
  • இந்தியாவின் பாரம்பரிய பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் ஊக்குவிப்பது போன்றவை இம்மையத்தின் பணிகளாகும். ஒவ்வொரு மண்டல மையமும் செயல்பாடுகளை ஒழுங்கமைப்பதன் மூலமும் பிற மண்டலங்களைச் சேர்ந்த கலைஞர்களை அழைப்பதன் மூலமும் நாட்டின் பண்பாட்டு மையங்களை ஒருங்கிணைத்து ஊக்குவிக்கின்றன.[6]

நிர்வாகம்

தொகு

இந்தியாவின் ஏழு பண்பாட்டு மண்டல மையங்களில் ஒன்றான தென்மண்டல பண்பாட்டு மையத்திற்கு தேவையான முறையான நிர்வாக உள்கட்டமைப்பு வசதிகள் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.

தென்னக பண்பாட்டு மையத்தின் உறுப்பு மாநிலங்கள்

தொகு

இந்தியாவின் மற்ற பண்பாட்டு மண்டல மையங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "South Zone Cultural Centre", szccindia.org, பார்க்கப்பட்ட நாள் 2024-01-21
  2. "About us", szccindia.org, பார்க்கப்பட்ட நாள் 2024-01-21
  3. "Thanjavur: வாங்க... வாங்க... தென்னக பண்பாட்டு மையத்திற்கு வாங்க!!!". ஏபிபி நாடு. https://tamil.abplive.com/travel/thanjavur-travel-south-zone-cultural-centre-all-details-you-need-to-know-about-it-tnn-104683. பார்த்த நாள்: 2 July 2024. 
  4. http://www.davp.nic.in/WriteReadData/ADS/tam_09132_3_1920b.pdf
  5. https://www.dinamalar.com/news_detail.asp?id=351848
  6. Ramani, V. v (2019-10-10). "SZCC - A cultural bridge". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-01-23.

வெளி இணைப்புகள்

தொகு