தஞ்சாவூர் நவமுக தூர்க்கை கோயில்

நவமுக தூர்க்கை கோயில் என்பது தஞ்சாவூர் நகரில் அமைந்துள்ள துர்க்கையம்மன் கோயிலாகும். [1] இக்கோயில் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகே மனோஜியப்பா தெருவில் அமைந்துள்ளது. இக்கோயில் மேற்கு நோக்கி அமைந்ததாகும். இதில் ராஜகோபுரமும், சிறிய மண்டபமும் அமைந்துள்ளன.

மூலவரான துர்க்கையம்மன் நான்கு கரங்களுடன் உள்ளார். சங்கு சக்கரம் ஏந்தியிருப்பதால் இவர் விஷ்ணு துர்க்கையாவார். இவருடைய காலடியில் எருமை மாட்டின் தலை பொறிக்கப்பட்டுள்ளது. துர்க்கையம்மன் பின்புறம் வட்ட வடிவில் துர்க்கையம்மனின் எட்டு முகங்கள் உள்ளன. அதனால் மூலவரை நவமுக துர்க்கை என்று அழைக்கின்றனர்.

மூலவரைத் தவிர்த்து இங்கு மதுரைவீரன் தனது இரு மனைவிமார்களோடு உள்ள சன்னதியும் உள்ளது.

தல சிறப்பு

தொகு

துர்க்கையம்மன் நவ முகங்களில் காட்சிதருவது,

விழாக்கள்

தொகு

ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் வருட பூஜை நடைபெறுகிறது. அன்று கணபதி ஹோமம், லட்சிமி ஹோமம், நவகிரக ஹோமம் ஆகியவை நடைபெறுகிறது. நவராத்தியின் ஒன்பது நாட்களும் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. 250 சிறுமிகள் பால்குடம் சுமந்து வரும் நிகழ்வு ஆண்டு திருவிழாவின் இரண்டாம் நாள் நடக்கிறது.

ஆதாரங்கள்

தொகு
  1. தினகரன் ஆன்மிக மலர் 27.02.2016 நல்லன எல்லாம் அருளும் நவமுக துர்க்கை - பக்கம் 18-19