தஞ்சாவூர் நாகநாதசுவாமி கோயில்

தஞ்சாவூர் நாகநாதசுவாமி கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் கீழவாசல் பகுதியில் உள்ள பூமால் ராவுத்தர் கோயில் தெருவினை அடுத்து அமைந்துள்ள கும்பகோணத்தான் தெருவில் அமைந்துள்ளது.

நாகநாதசுவாமி கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சை மாவட்டம்
அமைவு:தஞ்சாவூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:நாகநாதேஸ்வரர்

தேவஸ்தான கோயில்

தொகு

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு  உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1]

மூலவர்

தொகு

இக்கோயிலின் மூலவராக நாகநாதசுவாமி லிங்கத்திருமேனியாக உள்ளார். இங்குள்ள இறைவி அகிலாண்டேஸ்வரி ஆவார்.

கோயில் அமைப்பு

தொகு
 
நுழைவாயில்

இக்கோயிலில் இரு வாயில்களைக் கொண்டு அமைந்துள்ளது. ஒரு வாயில் மூலவரை நோக்கிச் செல்லும் வகையிலும், மற்றொரு வாயில் அம்மன் சன்னதியை நோக்கிச் செல்லும் வகையில் அமைந்துள்ளன. மூலவர் சன்னதியின் முன்பாக நந்தியும், பலிபீடமும் காணப்படுகின்றன. மண்டபத்தில் விநாயகர், விநாயகர் முன்பாக நந்தி, நாகம், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி, பைரவர், சூரியன் உள்ளிட்ட சிற்பங்கள் காணப்படுகின்றன. இம்மண்டபத்தில் நவக்கிரக சிற்பங்கள் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கையம்மன் சிற்பங்கள் உள்ளன. அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதிக்கு இடப்புறமாக அகிலாண்டேஸ்வரி சன்னதி உள்ளது. கோயிலின் எதிரே குளம் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997