தஞ்சாவூர் நாலுகால் மண்டப ஆஞ்சநேயர் கோயில்

தஞ்சாவூர் நாலுகால் மண்டப ஆஞ்சநேயர் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் நாலுகால் மண்டபம் அருகே அமைந்துள்ளது.

நுழைவாயில்

அமைவிடம் தொகு

அய்யன்கடைத்தெருவின் சற்று மேடான பகுதியில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் உள்ளது. அக்கோயிலுக்கு எதிரில் நாலு கால் மண்டபம் உள்ளது. பெருமாள் கோயிலின் தேர்முட்டி கோயிலின் முன்பு இடப்புறம் இக்கோயில் அமைந்துள்ளது. [1]

மூலவர் தொகு

இங்குள்ள மூலவர் இரண்டு அல்லது இரண்டரை அடி உயரத்தில் நின்ற நிலையில் உள்ளார்.[1]

மூலவர் அமைப்பு தொகு

தஞ்சாவூரில் வாழ்ந்த சதாசிவ பிரஹ்மேந்திராள் என்பவரால் பெருமாள் கோயிலின் தேர்முட்டியில் இந்த ஆஞ்சநேயர் சிறிய அறையில் அமைக்கப்பட்டுள்ளார். கட்டிட அமைப்பை வைத்து கோயில் என்று கூற முடியாது. உள்ளூரில் உள்ளோர் இக்கோயிலை நன்கு அறிவர். [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 தஞ்சாவூர் அனுமார் கோயில்கள், வாயுசுதா வெளியீடு, தில்லி 110 092