தஞ்சாவூர் மேலவாசல் சுப்பிரமணியர் கோயில்
தஞ்சாவூர் மேலவாசல் சுப்பிரமணியர் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் உள்ள முருகன் கோயில்களில் ஒன்றாகும்.
அமைவிடம்
தொகுஇக்கோயில் மேலவீதியின் அருகே மேல் வாசலில் கொங்கனேசுவரர் கோயிலுக்குப் பின் புறம் உள்ளது. இக்கோயிலின் இடது புறம் ரெங்கநாதர் கோயில் உள்ளது.
தேவஸ்தான கோயில்
தொகுதஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2]
மூலவர்
தொகுமூலவர் சன்னதியில் முருகன் வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் உள்ளார்.
அமைப்பு
தொகுநுழைவாயில், மண்டபம், மூலவர் கருவறை, விமானம், திருச்சுற்று ஆகிய அமைப்புகளைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. 18 படிகளை ஏறி மேலே செல்லும் வகையில் அமைந்துள்ள இக்கோயிலில் சாலை உயர்ந்ததன் காரணமாக மூன்று படிகள் கீழே சென்றுவிட்டதாகக் அறியப்படுகிறது. எனவே 15 படிகளைக் கடந்து உள்ளே செல்லத்தக்க வகையில் உள்ளது. உயர்ந்த தளத்தினைக் கடந்து மேலே செல்லும் போது முன்னர் மண்டபம் காணப்படுகிறது. அம்மண்டப இடப்புறத்தில் காசி விசுவாதர், விசாலாட்சி உள்ளனர். அடுத்து மூலவர் சன்னதி உள்ளது. மூலவருக்கு முன்பாக வலப்புறம் விநாயகர், இடப்புறம் இடும்பன் உள்ளனர். மூலவருக்கு முன்பாக பலிபீடமும் முருகனின் வாகனமாக மயிலும் உள்ளன. திருச்சுற்றில் விநாயகர், நாகர்கள் உள்ளனர். யாழி கச்சையணிந்த கோலத்தில் மற்றொரு முருகன் சிலை திருச்சுற்றில் உள்ளது.