தஞ்சாவூர் ராஜகோபாலசுவாமி கோயில்

தஞ்சாவூர் ராஜகோபாலசுவாமி கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் வடக்கு வீதி அருகே ராஜகோபாலசுவாமி கோயில் தெருவில் அமைந்துள்ளது. இக்கோயிலை மதனகோபாலப் பெருமாள் கோயில் என்றும் அழைக்கின்றனர்.

ராஜகோபாலசுவாமி கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர் மாவட்டம்
அமைவு:தஞ்சாவூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:சக்கரத்தாழ்வார்

ராஜகோபாலசுவாமி கோயில்

தொகு

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1] இக்கோயில் கருவறை அழகிய கற்றளளியாகவும் நந்தவனங்களும், பிற்காலத்தில் எடுக்கப்பெற்ற மண்டபங்களைக் கொண்டும் ஒரே கோபுர வாயிலோடு காணப்படுகிறது.[2] கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது மற்றொரு சிறிய கோபுரம் காணப்படுகிறது. அந்த கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம் உள்ளது. கருவறையில் ராஜகோபாலசுவாமி இல்லை. சக்கரத்தாழ்வார் திருமேனி உள்ளது.

இரு மண்டபங்கள்

தொகு

இக்கோயில் வளாகத்தின் மேல் திசையில் உள்ள மண்டபத்தில் சிவேந்திரர் கோயில் உள்ளது. வடபுறம் உள்ள மண்டபத்தில் காளியம்மன் கோயில் உள்ளது.

சிவேந்திரர் கோயில்

தொகு

திருச்சுற்றில் உள்ள சிவேந்திரர் கோயில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு 88 கோயில்களில் ஒன்றாகும்.[1] அங்கு மராட்டியர்களின் வழிபாட்டுத்தெய்வமான சிவேந்திரர் உருவங்கள் தேவியருடன் காணப்படுகின்றன. ஒவ்வொரு சிற்பத்திற்குப் பின்னரும் மிகப்பெரிய அறுகோணம் உள்ளது.[2]

பகுளாமுகி அம்மன் சன்னதி

தொகு

திருச்சுற்றில் ராஜகோபுரத்திற்கும் இரண்டாவது கோபுரத்திற்குமிடையே பகுளாமுகி அம்மன் எனப்படும் காளியம்மன் சன்னதி உள்ளது. இச்சன்னதியில் பகுளாமுகி அம்மன், கஜலட்சுமி, பைரவர், மார்த்தாண்ட பைரவர், சிவ துர்க்கை, கோலாப்பூர் மகாலட்சுமி, விஷ்ணு துர்க்கை, சப்த கன்னியர் உள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997, வ.எண்.53, அருள்மிகு மதனகோபால்சாமி திருக்கோயில்
  2. 2.0 2.1 குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர், 1997, பக்.144-146