தஞ்சாவூர் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில்

தஞ்சாவூர் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் தஞ்சாவூரில் உள்ள பெருமாள் கோயிலாகும்.

கோயில் நுழைவாயில்

அமைவிடம்

தொகு

தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் கரந்தட்டாங்குடியை அடுத்துள்ள சுங்கம்தவிர்த்தான் திடல் என்னுமிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. [1]

மூலவர்

தொகு

இக்கோயிலின் மூலவராக லட்சுமி நாராயணர் உள்ளார்.

அமைப்பு

தொகு
 
விமானம்

கோயிலின் முகப்பில் லட்சுமி நாராயணர் அமர்ந்த கோலத்தில் உள்ளார். வலது புறம் கருடாழ்வாரும், இடது புறம் ஆஞ்சநேயரும் உள்ளனர். முன் மண்டபம், கருவறை, விமானம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. கோயிலின் வலது புறத்தில் பால ஆஞ்சநேயர் சன்னதியும், இடது புறத்தில் பால விநாயகர் சன்னதியும் உள்ளன. அதற்கு முன்பாக மூலவரை நோக்கிய நிலையில் கருடாழ்வார் உள்ளார். அதற்கு முன்பாக பலி பீடம் உள்ளது. மூலவர் உள்ள கருவறைக்கு முன்பாக இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர்.

குடமுழுக்கு

தொகு

26 நவம்பர் 1993 அன்று குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டு உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. www.tamilvu.org/library/thirukkovil/Thanjavur/Form1.html