தஞ்சாவூர் விஜயராமர் கோயில்

தஞ்சாவூர் விஜயராமர் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் மேல வீதியில் அமைந்துள்ளது.

தஞ்சாவூர் விஜயராமர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சை மாவட்டம்
அமைவு:தஞ்சாவூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:விஜயராமர்

தேவஸ்தான கோயில்

தொகு

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1] இக்கோயில் டபீர் விஜயராமசாமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. பிரதாபசிம்மர் காலத்தில் அமைச்சராக இருந்தவர் டபீர் பண்டிதர் ஆவார். அவரது பெயரால் இக்கோயில் அழைக்கப்படுவதால் பிரதாபசிம்மர் காலத்தைச் சேர்ந்த கோயிலாகக் கருதலாம்.[2]

அமைப்பு

தொகு

இக்கோயில் ராஜகோபுரம், பலிபீடம், கொடி மரம், முன் மண்டபம், கருவறை, விமானம், வெளிச்சுற்று ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. முன்மண்டபத்தில் இடப்புறம் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. கொடி மரத்தையடுத்து கருடாழ்வார் உள்ளார். இக்கோயிலின் வெளிச்சுற்றில் வால்மீகி மண்டபம் உள்ளது.

மூலவர்

தொகு

இக்கோயிலின் மூலவராக விஜயராமர் சீதை, இலக்குவனார், அனுமார் ஆகியோருடன் உள்ளார். மூலவர் விஜயகோதண்டராமர் என்றழைக்கப்படுகிறார்.

குடமுழுக்கு

தொகு

21 ஆகஸ்ட் 1987இல் குடமுழுக்கு ஆனதாகக் கல்வெட்டு காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. அருள்மிகு விஜயராமர் கோயில், வரிசை எண்.15, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997
  2. குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர், 1997