தஞ்சைக் கலைக்கூடம்

தஞ்சைக் கலைக்கூடம் எனபது தஞ்சை நகரில் உள்ள தஞ்சை அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இது 1951 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

தஞ்சை அரண்மனை வளாக அருங்காட்சியகம்
கலைக்கூடம் தஞ்சாவூர், முகப்பு தோற்றம்

கலைக்கூடத்தின் சிறப்பு

தொகு

இந்தக் கலைக்கூடம் உலகச் சிறப்பு பெற்றதாகும். உலகத்தில் எங்கும் காணக்கிடைக்காத சில தெய்வ செப்புத் திருமேனிகள் இக்கலைக்கூடத்தில் உள்ளன. இக் கலைக்கூடத்தில் 7ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. இக்கலைக்கூடத்தில் உள்ள செப்புச் சிலைகளும் கற்சிலைகளும் பெரும்பாலும் தஞ்சையை ஆண்ட புகழ்மிக்க சோழ மன்னர்கள் காலத்தவை. சில விஜயநகர பரம்பரையில் வந்த தெலுங்கு நாயக்க மன்னர்கள் காலத்தவை, எஞ்சிய சில மராட்டிய மன்னர் காலத்தவை.

வரலாறு

தொகு

1951ஆம் ஆண்டின் முற்பகுதியில் கல்கத்தா தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் தஞ்சை வந்திருந்தபோது கருந்தட்டான் குடியில் வடவாற்றின் வடகரையில் கவனிப்பாரற்றுக் கிடந்த பிரம்மன் சிலை ஒன்றின் அழகில் மயங்கி அதைக் கல்கத்தாவுக்கு எடுத்துச் செல்ல விரும்பினார். அதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இச்சிலையை அப்போது தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த டி. கே. பழனியப்பன் பார்வையிடச் சென்றபோது அங்குள்ள மக்கள் இச்சிலையைத் தஞ்சை மாவட்டத்திற்கு வெளியே எடுத்துச் செல்லக் கூடாது என வலியுறுத்தியதைக் கண்டு சிலையைத் தஞ்சை அரண்மனைக் கட்டடத்திற்குப் பாதுகாப்பாக எடுத்து வந்தார். இதன் பிறகு இதுபோல மாவட்டத்தில் கவனிப்பாரற்று உள்ள சிலைகளைக்கொண்டு கலைக்கூடம் அமைக்கும் யோசனையில் மாவட்டத்தில் உள்ள இதுபோன்ற சிலைகளைத் திரட்டினார். பூமியில் புதைந்துகிடந்து கிடைத்த செப்புச்சிலைகள், கோயிலில் வழிபாடு இல்லாமல் உள்ள செப்புச் சிலைகள் ஆகியவற்றைச் சேகரித்து இக்கலைக்கூடம் 09.12.1951 (ஞாயிற்றுக்கிழமை) இல் அமைக்கப்பட்டது.[1][2]

கலைக்கூடச் சிலைகள் சில

தொகு

மேற்கோள்கள்

தொகு

உசாத்துணை

தொகு
  • கவின்மிகு தஞ்சைக் கலைக்கூடம், கோ.வீராசாமி,1989.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சைக்_கலைக்கூடம்&oldid=3800820" இலிருந்து மீள்விக்கப்பட்டது