தஞ்சை வெ. கோபாலன்
தஞ்சை வெ. கோபாலன் (1936- 6. மே. 2021) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர், நூலாசிரியர் ஆவார்.[1]
வாழ்க்கை
தொகுவெ. கோபாலன், தமிழகத்தின், நாகப்பட்டினம் மாவட்டம், தில்லையடியில் 1936இல் பிறந்தார். இவர் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று தஞ்சாவூரில் வசித்துவந்தார். இவர் திருவையாறு பாரதி இயக்கத்தின், பாரதி இலக்கியப் பயிலக இயக்குநராக 2001 முதல் பொறுப்பேற்று பாரதி குறித்த அஞ்சல் வழி பாடதிடத்தை நடத்திவந்தார். மேலும் இவர் திருவையாறு நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவராகவும் இருந்தார். இவர் 15 நூல்களை எழுதியுள்ளார்.[2]
எழுதிய நூல்கள்
தொகு- திருவையாறு வரலாறு
- தஞ்சை மராட்டியர் வரலாறு
- தஞ்சை நாயக்க மன்னர்கள் வரலாறு
- வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்
- திருக்கோயில்களில் நாட்டியாஞ்சலி
- தண்ணீர் விட்டா வளர்தோம்
- உரைநடையில் கம்பராமாயணம்