தடிவீரையன்

' தடிவீரையன் ' திருநெல்வேலியில் இருந்து சேரண்மாதேவி செல்லும் வழியில் தடிவீரையன் கோயில் உள்ளது. இது ஒரு நாட்டார் தெய்வமாகும்.

வரலாறு தொகு

பாண்டிய மன்னன், நெல்லையப்பர் கோயில் கட்டுவதற்காக மரம் வேண்டும் என்று மேற்கு தொடர்ச்சி மலைக்கு ஆட்களோடு செல்கிறான். அங்கிருந்த உயரமான மரங்களை எல்லாம் வெட்டிக் கொண்டுவந்து நெல்லையப்பர் கோயிலைக் கட்டுகிறான். கொடிமரமும் நாட்டுகிறான். அதனைத் தொடர்ந்து அவ்வூர் மக்களுக்கும் ஆடுமாடுகளுக்கும் நோய் பிடித்தல், இறத்தல் போன்றத் துன்பங்கள் நேரிடுகின்றன. இதை அறிந்த மன்னன் கோடாங்கியை அழைத்து இதற்கான காரணத்தைக் கேட்கிறான்.

கோடாங்கியின் குறி தொகு

கோடாங்கியின் குறியில் மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து வெட்டிக்கொண்டு வந்த மரங்களோடு ஐயனாரும் வந்திருப்பது தெரிய வருகிறது. உடனே மன்னர் அதற்கானப் பரிகாரமக என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, தனக்கும் தன் பரிவாரங்களுக்கும் ( தேவதைகள் ) நெல்லையப்பர் கோயிலில் நிலையம் வேண்டும் எனக் கேட்கிறார் ஐயனார்.

மன்னர் கூற்று தொகு

அதைக் கேட்ட மன்னர் துணிந்து, பலி கேட்கும் தெய்வங்களுக்குக் கோயிலில் இடமில்லை என்றும் கோயிலுக்கு மேற்கே நிலையமிட்டுக் கொடுக்கிறேன் என்றும் வாக்குக் கொடுக்கிறான். அதன் பிறகு மக்களுக்கும் ஆடுமாடுகளுக்கும் நேர்ந்த துன்பங்கள் நீங்கிப் போகின்றன.

பெயர்க்காரணம் தொகு

மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து வெட்டிக்கொண்டு வரப்பட்டத் தடியில் இந்த ஐயனார் வந்தமையால் தடிவீரையன் எனப் பெயர் பெற்றார். அந்தத் தெருவிற்கும் தடிவீரையன் தெரு என்றே இன்றும் பெயர் வழங்கப்படுகிறது.

வழிபாடு தொகு

இந்தத் தடிவீரையன் சாமியை அருப்புக்கோட்டையில் உள்ள பட்டசாலியர் இனத்தைச் சார்ந்தவர்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.

திருவிழா தொகு

பங்குனி உத்திரத்தில் இக்கோயிலுக்குக் கொடைத் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் வேறு பல சமூகத்தவரும் கலந்துகொள்கிறனர்.

பார்வை நூல் தொகு

பழனி, கோ , மக்கள் தெய்வங்கள் , புலம் வெளியீடு,

"https://ta.wikipedia.org/w/index.php?title=தடிவீரையன்&oldid=3852882" இலிருந்து மீள்விக்கப்பட்டது