தடுப்பூசி-தயக்கம்

தடுப்பூசி-தயக்கம் (Vaccine-naïve) என்பது ஒரு தனிநபர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பதைக் குறிக்கிறது. இதனால் குறிப்பிட்ட அந்நபருக்கு ஒரு நோய்க்குரிய நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் போகும் அல்லது தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை எதிர்க்கும் நோய்த் தடுப்பாற்றல் இல்லாமல் போகும்.

நோயெதிர்ப்பு சக்தியின் பயன் நோய்க்கிருமியை ஆரம்பத்தில் சந்திக்கும் போது அல்லது தடுப்பூசி போட்டுக் கொண்டவுடன் தொடங்குகிறது. உடலின் நோயெதிர்ப்பு நினைவகத்தினை உருவாக்கி அதை பராமரிப்பதற்கும் இச்சக்தி வழிவகுக்கிறது

ஒரு நபர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முன்னதாக அவருக்கு இருக்கும் மருத்துவ நிலைமைகள், வளங்களின் பற்றாக்குறை, முந்தைய தடுப்பூசி தோல்வி, மத நம்பிக்கைகள், தனிப்பட்ட நம்பிக்கைகள், பக்கவிளைவுகளுக்கு பயம், ஊசிகளுக்கு பயம், தகவல் பற்றாக்குறை , தடுப்பூசி பற்றாக்குறை, மருத்துவர் பற்றிய அறிவும் நம்பிக்கைகளும், சமூக அழுத்தம் மற்றும் இயற்கையான எதிர்ப்பு சக்தி நம்பிக்கை போன்றவை இக்காரணங்களில் சிலவாகும். [1][2][3][4]

விளைவுகள் தொகு

தட்டம்மை மற்றும் இன்ஃபுளுவென்சா காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் தடுப்பூசி-தயக்கம் கொண்ட மக்களிடத்தில் எளிதில் பரவுகின்றன, இதனால் திடீர் கொள்ளைநோய்கள் ஏற்படுகின்றன. தடுப்பூசி-தயக்க நபர்கள் தொற்றுநோயியல் வல்லுநர்கள் கூறும் சமுதாய நோய் எதிர்ப்பு சக்தி குறைவை உண்டாக்கி அச்சுறுத்துகிறார்கள். [5][6][7] ஏனென்றால் தடுப்பூசிகள் அவற்றைப் போட்டுக் கொள்பவர்களுக்கு மட்டும் பாதுகாப்பு அளிப்பதில்லை. தொற்று நோய் பரவுதலால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு அவை மறைமுக பாதுகாப்பையும் அளிக்கின்றன. மேலும் ஒரு நபர் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதால் நோயைப் பரப்புவதற்கும், அதன் பாதிப்புகளை அதிகரிப்பதற்கும் காரணமான நபர்களின் எண்ணிக்கையை குறைக்கிறார். மேலும் சமுதாயத்தின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறார். [8]

மேற்கோள்கள் தொகு

  1. Menson, E. N.; Mellado, M. J.; Bamford, A.; Castelli, G.; Duiculescu, D.; Marczyńska, M.; Navarro, M. L.; Scherpbier, H. J. et al. (2012). "Guidance on vaccination of HIV-infected children in Europe". HIV Medicine 13 (6): 333–336; e1–336. doi:10.1111/j.1468-1293.2011.00982.x. பப்மெட்:22296225. 
  2. "CDC Smallpox | Smallpox (Vaccinia) Vaccine Contraindications (Info for Clinicians)". Bt.cdc.gov. Archived from the original on 2013-08-02. பார்க்கப்பட்ட நாள் 2013-07-15.
  3. Wallace, H. Shortages require practices to take extra measures to keep patients up-to-date on vaccines: Calling the shots. AAP News 2003; 23:54–56
  4. Turner, N.; Grant, C.; Goodyear-Smith, F.; Petousis-Harris, H. (2009). "Seize the moments: missed opportunities to immunize at the family practice level". Family Practice 26 (4): 275–8. doi:10.1093/fampra/cmp028. பப்மெட்:19477931. https://archive.org/details/sim_family-practice_2009-08_26_4/page/275. 
  5. Kiera Butler (2013-05-27). "The Real Reason Kids Aren't Getting Vaccines". Mother Jones. பார்க்கப்பட்ட நாள் 2013-07-15.
  6. "Prevention and Control of Influenza with Vaccines: Recommendations of the Advisory Committee on Immunization Practices (ACIP), 2011". Cdc.gov. பார்க்கப்பட்ட நாள் 2013-07-15.
  7. West, D. J.; Calandra, G. B. (1996). "Vaccine induced immunologic memory for hepatitis B surface antigen: implications for policy on booster vaccination". Vaccine 14 (11): 1019–27. doi:10.1016/0264-410X(96)00062-X. பப்மெட்:8879096. https://archive.org/details/sim_vaccine_1996-08_14_11/page/1019. 
  8. Garnett, G. P. (2005). "Role of Herd Immunity in Determining the Effect of Vaccines against Sexually Transmitted Disease". The Journal of Infectious Diseases 191: S97–106. doi:10.1086/425271. பப்மெட்:15627236. 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தடுப்பூசி-தயக்கம்&oldid=3557012" இலிருந்து மீள்விக்கப்பட்டது