தட்சிணாமூர்த்தி தோத்திரம்

தட்சிணாமூர்த்தி தோத்திரம் ( Dakshinamurti Stotra ) என்பது ஆதி சங்கரரால் சிவனுக்கு அர்பணிக்கப்பட்ட ஒரு சமசுகிருத சமயப் பாடலாகும். [1] இது அத்வைத வேதாந்தத்தின் அடிப்படையில் பிரபஞ்சத்தின் மனோதத்துவத்தை விளக்குகிறது.

விளக்கம் தொகு

இந்து புராணங்களில், தட்சிணாமூர்த்தி என்பது அறிவின் உயர்ந்த கடவுளான சிவனின் அவதாரம் எனப்படுகிறது. தட்சிணாமூர்த்தி என்பவர் அனைத்து வகையான அறிவின் குருவாகவும், ஞானத்தை அளிப்பவராகவும் இருக்கிறார். சிவனின் இந்த அம்சம் தான் உயர்ந்த அல்லது இறுதி விழிப்புணர்வு, புரிதல் மற்றும் அறிவு என அவரது உருவக அமைப்பு உள்ளது என்று கருதப்படுகிறது. [2] இந்த வடிவம் யோகம், இசை மற்றும் ஞானத்தின் ஆசிரியராகவும், சாத்திரங்கள் பற்றிய விளக்கத்தை அளிப்பவராகவும் சிவனை அவரது அம்சத்தில் பிரதிபலிக்கிறது.

இந்துக் கடவுள்களின் பெரும்பாலான பாடல்களைப் போலல்லாமல், இவை மானுட வடிவங்கள் அல்லது அந்தக் கடவுள்களின் புராணச் செயல்களின் விவரிப்பு வடிவத்தில் உள்ளன. இது கருத்தியல் மற்றும் தத்துவ அறிக்கைகளின் வடிவத்தை உரைக்கிறது. [3] புலன்களின் பன்முகத்தன்மையின் நடுவில் உள்ள ஆன்மாவின் ஒருமைப்பாட்டின் விளக்கத்தை அதன் வசனங்கள் வழங்குகின்றன. [4]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு