தட்சிண் கங்கோத்ரி

தட்சின் கங்கோத்ரி என்பது அண்டார்டிகா கண்டத்தில் இந்தியாவின் சார்பாக அமைக்கப்பட்ட முதல் ஆய்வு நிலையமாகும். இது தென்துருவத்திலிருந்து 2500 கி. மீ தொலைவில் உள்ளது. இந்த ஆய்வுக்கூடம் இந்தியாவின் மூன்றாவது அண்டார்டிகா பயணத்தின் பொழுது (1983-84) அமைக்கப்பட்டது. இந்த நிலையம் 8 வார காலத்தில் 81 பேர் கொண்ட குழுவால் கட்டப்பட்டது.

இந்திய இராணுவத்தின் உதவியுடன் நடைபெற்ற கட்டுமான பணிகள் ஜனவரி மாத இறுதியில் 1984 ஆம் ஆண்டு நிறைவுபெற்றது. இந்திய குடியரசு தினம் சோவியத் மற்றும் கிழக்கு ஜெர்மனி நாட்டவருடன் இணைந்து கொண்டாடப்பட்டது.[1]

விவரங்கள்

தொகு

ஆளில்லா ஆய்வு நிலையமான தட்சிண் கங்கோத்ரி முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பு பொருட்களை கொண்டு கட்டப்பட்டது. இது சூரிய சக்தியில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது. தரவுகளை சேகரித்து கணினியில் தானாக சேமிக்கும்வண்ணம் வடிவமைக்கப்பட்டது. திட்டத்தின் நோக்கப்படி இது ஒரு நிரந்தர ஆய்வு நிலையமாகும்.

இந்த நிலையம் A & B என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தன. A பகுதி ஜெனரேட்டர் அறை, எரிபொருள் விநியோகம், பட்டறை ஆகியவற்றை கொண்டதாகவும் , B பகுதி ஆய்வுகூடம், ரேடியோ அறை மற்றும் இதர வசதிகளை கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டது.

தானியங்கி வெப்ப பதிவு அமைப்பும் இங்கே நிறுவப்பட்டது. இங்கே ரேடியோ கதிர்களை கொண்டு ஆய்வுகளும் நடத்தப்பட்டன. 1984 ஆம் ஆண்டு இரண்டு கிலோமீட்டர்களுக்கு அப்பால் புதிய ஓடு தளத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. அதே ஆண்டு பிற்பகுதியில் குன்றுக்கு மேலே சிறு கள ஆய்வகம் அமைக்கப்பட்டது. இதன் நோக்கம் அதிக அலைவரிசை கொண்ட செயற்கைக்கோள் தொடர்பினை இந்தியாவிற்கு நேரடியாக ஏற்படுத்துவதே ஆகும்.

1985 ஆம் ஆண்டு தானியங்கி புகைப்பட தரவிறக்கம் மற்றும் தரவேற்ற கருவிகள், ரேடியோ மீட்டர் சொண்டே போன்றவை காற்றின் வேகத்தை மற்றும் சூரியனின் வெப்பத்தை அளக்க நிறுவப்பட்டன. இவற்றை கொண்டு காற்றலை மின்சாரம் மற்றும் சூரிய ஒலி மின்சாரம் அமைக்கும் சாத்திய கூறுகள் ஆராயப்பட்டன. மின்மயமாக்கப்பட்ட பனிப் பயண வண்டி பழுதுபார்க்குமிடம் DRDO உதவியுடன் அமைக்கப்பட்டது. இந்திய கடற்படை கம்பியில்லா தொலைதொடர்பு வசதிகளை செய்து கொடுத்தது.[2]

விநியோக தளமாக மாற்றல்

தொகு

1988-89 ஆம் ஆண்டு இந்த நிலையம் பனியில் மூழ்கியது. இதன்காரணமாக இந்த நிலையம் கைவிடப்பட்டு, மைத்ரி என்ற புதிய ஆய்வு நிலையம் தட்சின் கங்கோத்ரியை காட்டிலும் மிதமான தட்பவெப்பம் கொண்ட இடத்தில் அமைக்கப்பட்டது. 25 பிப்ரவரி 1990 ஆம் ஆண்டு இந்த நிலையம் முழுவதுமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு பின்பு விநியோக நிலையமாக மாற்றப்பட்டது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. அண்டார்டிகாவுக்கான இந்தியாவின் திட்டம்
  2. https://books.google.co.in/books?id=w2snz5Cfb0gC&pg=RA2-PT87&dq=dakshin+gangotri&hl=en&sa=X&ei=pipZU9TsEISbigeLqIGoBw#v=onepage&q=dakshin%20gangotri&f=false
  3. http://www.ncaor.gov.in/antarcticas
"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்சிண்_கங்கோத்ரி&oldid=3638365" இலிருந்து மீள்விக்கப்பட்டது