தட்டலங்காய் புட்டலங்காய்

தட்டலங்காய் புட்டலங்காய் என்பது ஒரு விளையாட்டு. தாய்மார் குழந்தைகளோடு பேசியும், பாடியும் வேடிக்கை காட்டும் விளையாட்டு.

குழந்தைகள் பலரைத் தாய் தன் முன்பக்கம் உட்கார வைப்பார். பாட்டுப் பாடும்போது ஒவ்வொருவராகத் தொட்டுக்கொண்டே வருவார்.

தட்டலங்காய் புட்டலங்காய்
தாடிக்கொம்பு மாதுளங்காய்
தேங்காய் உடைச்சு உடைச்சு
தேரு மேலே வச்சு வச்சு
மாங்காய் உடைச்சு உடைச்சு
மாடி மேலே வச்சு வச்சு
எந்தக் காக்கா சாயுமோ
இந்தக் காக்கா

இந்தக் காக்கா எனத் தொடும் குழந்தை படுத்துக்கொள்ளும். இப்படி எல்லாக் குழந்தையும் படுத்துக்கொண்ட பின்னர் எல்லாக் குழந்தைகளையும் தூங்கவைத்து விட்டதாக வைத்துக்கொண்டு தாய் நெல் குற்றுவது போல நடிப்பார். குந்தைகள் படுத்துக்கொண்டே பார்த்து மகிழும்.

குற்றும்போது பாடும் பாடல்

சின்ன உலக்கை குத்து குத்து
பெரிய உலக்கை குத்து
சீமாட்டி வச்ச உலக்கை
சிக்கு, சிக்கு, சிக்கு (குத்தும் ஓசை)

இத்துடன் ஆட்டம் முடிந்து மறு ஆட்டம் தொடங்கும்.

மேலும் பார்க்க தொகு

கருவிநூல் தொகு

  • இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980