தட்டாங்கல் ஆட்டம்

தட்டாங்கல் ஆட்டம் ஒரே மாதிரியான உருண்டையான சிறு கூழாங்கற்களைக் கொண்டு பெரும்பாலும் சிறுமியர் விளையாடும் விளையாட்டு. இது பாண்டிக்கல் என்றும் அழைக்கப்படும். சங்ககாலத்தில் இதன் பெயர் தெற்றி.

தட்டாங்கல் ஆடும் பெண்கள்

இவ்விளையாட்டு வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு எண்ணிக்கையுள்ள கற்களைக் கொண்டு விளையாடப்படுகிறது. விளையாட்டை மேலும் சுவாரசியமானதாக்க பாட்டுப்பாடிக் கொண்டு ஆடுவர்.

ஏழு கற்களைக் கொண்டு ஆடப்படும் ஆட்டத்தில்: ஒண்ணான், இரண்டான், மூன்றான், நான்கான் ஐந்தான், ஆறான், ஏழான், எட்டான், ஒன்பதான், பத்தான் என பத்து பிரிவுகள் ஆட வேண்டும். ஒவ்வொன்றுக்கும் எடுக்க வேண்டிய கற்களின் எண்ணிக்கைக்கும் எடுக்கவேண்டிய விதத்திற்கும் விதிமுறைகள் உண்டு. ஒவ்வொன்றும் ஆரம்பிக்கும் போது ஏழு கற்களையும் கீழே விரித்தவாறு போட்டுவிட்டு அதில் ஒரு கல்லை தாய்ச்சிக்கல் என கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். இக்கல்லை மேலே வீசியெறிந்துவிட்டு அது கீழே கைக்கு வந்து சேருமுன் கீழே கிடக்கும் மற்ற கற்களை அலுங்காமல் (ஒன்றை எடுக்கும்போது அடுத்ததைத் தொட்டுவிடக் கூடாது) கையில் எடுத்துக்கொண்டு மேலிருந்து விழும் தாய்ச்சிக்கல்லைப் பிடித்துவிட வேண்டும். தொடர்ந்து பத்தையும் தாய்ச்சிக் கல்லை கீழே விட்டுவிடாமல் ஆடிவிட்டால் மீண்டும் ஒண்ணானை கட்டை என்ற பெயரில் விளையாடி ஒரு கட்டை ஜெயித்ததாகக் கொள்ளப்படும்.

விளையாடும்போது பாடப்படும் பாடல்கள் (7, 8 நீங்கலாக)

ஒண்ணான்:

ஓரி உலகெலாம் உலகெலாம் சூரியன்
சூரியன் தங்கச்சி சுந்தர வல்லிக்கி
நாளக் கழிச்சிக் கல்யாணம்.

இரண்டான்:

ஈரிப்புச் செண்டுப்பூ;
ஈரிப்புச் செண்டுப்பூ இருதலையும் முல்லப்பூ
சூடிமுடிப்பவர்க்கு கொண்டையெலாம் தாழம்பூ.

மூன்றான்:

மூவன்னா ராவணா;
மூவன்னா ராவணா
சாதி பிராமணா.

நான்கான்:

நாலவெச்சு ரெண்டெடு;
நாலவெச்சு ரெண்டெடு
நாராயிணன் பேரிடு
பேரச்சொல்லி பிச்சையெடு.

ஐந்தான்:

அஞ்சலம் குஞ்சலம்;
அஞ்சலம் குஞ்சலம்
தம்பி சிதம்பரம்
தங்கச்சிமாப்பிளை வெண்கலம்.

ஆறான்:

ஆறு குறுகுறு:
ஆறு குறுகுறு
அன்னத்தாய் பேரிடு.

ஏழான் -தெரியவில்லை.

எட்டான் -தெரியவில்லை.

ஒன்பதான்:

ஒம்பந்தம்மா சாவாளோ;
ஒம்பந்தம்மா சாவாளோ
சாகும்போது ஏவாளோ
சங்குச்சத்தம் கேட்பாளோ.

பத்தான்:

பத்தேபதிச்சுக்கோ;
பத்தேபதிச்சுக்கோ
வயித்தநெறிச்சுக்கோ
சொக்கலிங்கநாதருக்கு
சோத்தவடிச்சுக்கோ.

கட்டை:

கட்டேகட்டே டேசிகா;
கட்டேகட்டே டேசிகா கம்மங்கட்டே டேசிகா
கொக்கக்கொரிச்சுவா கோழிமுட்டையிட்டுவா
நித்தங்குளிச்சுவா நீலப்பட்டுடுத்திவா
புதுக்கட்டை ஒண்ணு.}}

காட்சிப்படங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்டாங்கல்_ஆட்டம்&oldid=3215034" இலிருந்து மீள்விக்கப்பட்டது