தணிக்கை மற்றும் உறுதியளிப்பு நியமங்கள்

தணிக்கை மற்றும் உறுதியளிப்பு நியமங்கள் (AUDITING AND ASSURANCE STANDARDS- AAS) ஒரு நிறுவனத்தின் (இலாப நோக்கம் கொண்ட அல்லது இலாப நோக்கம் இல்லாத எந்த வகை நிறுவனம் ஆனாலும்) நிதிக் கணக்குகளை , சார்பற்ற, திறமையும் தகுதியும் பெற்ற , மூன்றாவது நபர் ஒருவர் தணிக்கை செய்து சான்று வழங்கினால் அதில் முதலீடு செய்துள்ளவர்களும் உறுப்பினர்களும்,பொது மக்களும் மற்றும் அரசாங்கமும் அவருடைய சான்றளிப்பை ஏற்றுக் கொள்கின்றனர்.இந்த மூன்றாவது நபரைத்தான் நாம் தணிக்கையாளர் என்கிறோம்.ஒவ்வொரு நாட்டிலும் இத்தகைய தணிக்கையாளர்களுக்குத் தேவையான கல்வியையும் பயிற்சியையும் வழங்க அந்தந்த நாட்டின் அரசுகள் ஓர் அமைப்பை உருவாக்கி வைத்துள்ளன.இந்தியாவில் "இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் கழகம்" (INSTITUTE OF CHARTERED ACCOUNTANTS OF INDIA-ICAI ) இப்பணியை மேற்கொண்டுள்ளது.பட்டயக் கணக்காளர்களை உருவாக்குவது மட்டுமின்றி அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவது, ஆலோசனைகளை வழங்குவது, அவர்களுடைய பணியைச் சிறப்பாக மேற்கொள்வதற்குத் தேவையான் நியமங்களை வகுத்தளிப்பது , அவர்களுக்கான நன்னெறிகளை வகுப்பது, அவர்கள் நன்னெறிகளில் இருந்து வழுவும்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளையும் இக்கழகம் செய்து வருகிறது. தணிக்கை முறைகள் ஒரே சீராக , முரண்பாடுகள் அற்றதாய் இருப்பதற்காகவும் தணிக்கையாளர்களுக்கு வழிகாட்டி உதவி புரிவதற்காகவும் , தணிக்கை மற்றும் உறுதியளிப்பு நியமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.தணிக்கையாளர்கள்,சட்டப்படி இவற்றை பின்பற்றியே தீர வேண்டும். இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் கழகம், இதுவரையில் முப்பத்து நான்கு "தணிக்கை மற்றும் உறுதியளிப்பு நியமங்களை" வெளியிட்டுள்ளது.அவை பின்வருமாறு:

  1. தணிக்கையின் அடிப்படைக் கோட்பாடுகள்
  2. நிதி நிலை அறிக்கைகளை தணிக்கை செய்வதன் நோக்கமும் எல்லையும்
  3. ஆவணமாக்கல்
  4. ஏமாற்றுதல் மற்றும் பிழை ஆகியவற்றைக் கையாள்வதில் நிதி நிலை அறிக்கைகளை தணிக்கைசெய்பவரின் கடமை
  5. தணிக்கைக்கான சான்று
  6. இடர்களை மதிப்பிடுதலும் அகக் கட்டுப்பாடுகளும்
  7. அகத் தணிக்கையாளரின் பணிகளைச் சார்ந்திருத்தல்
  8. தணிக்கையைத் திட்டமிடல்
  9. வல்லுனர் ஒருவரின் சேவையை / கருத்தைப் பயன்படுத்திக் கொள்ளல்
  10. மற்றொரு தணிக்கையாளரின் பணிகளைப் பயன்படுத்திக் கொள்ளல்.
  11. நிர்வாகம் கூறும் கருத்துகள்/ கொள்கைகள்
  12. கூட்டுத் தணிக்கையாளர்களின் பொறுப்பு
  13. தணிக்கையில் தகைவுடைமை
  14. பகுப்பாய்வு முறைகள்
  15. மாதிரிகளைத் தணிக்கை செய்தல்
  16. தொடர்ந்து செயல்படும் நிறுவனம்
  17. தணிக்கைப் பணிக்கான தரக்கட்டுப்பாடு
  18. கணக்கியல் மதிப்பீடுகளை தணிக்கை செய்தல்
  19. பின் நிகழ்வுகள்
  20. வர்த்தகத்தைப் பற்றிய அறிவு
  21. நிதி நிலை அறிக்கைகளை தணிக்கை செய்யும்போது சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கவனத்தில் கொள்ளல்