தண்டட்டி என்பது பெண்கள் காதில் அணியக்கூடிய காதணி வகைகளுள்‌ ஒன்று. இது தங்கம் அல்லது வெண்கலத்தினால் செய்யப்பட்ட ஒரு கனமான அணிகலனாகும். தென்னிந்தியப் பண்பாட்டில், குறிப்பாகத் தென் தமிழ்நாட்டிலுள்ள பெண்களிடையே இந்தக் காதணி அணியும் வழக்கம் இருந்தது. தற்போது இந்த அணிகலன்கள் அணியப்படுவதில்லை எனினும் வயதான சிலர் இன்னும் இதை அணிந்து கொண்டிருக்கின்றனர். இதை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பாப்படம் அல்லது பாம்படம் என்று அழைக்கின்றனர். இந்தக் காதணி அணிவதற்காகவே காது வளர்க்க வேண்டியிருக்கும். இதனைக் காது வடித்தல் என்று கூறுவர். இதற்காக அந்தக் காலப் பெண்கள் காது வளர்த்தனர். இவ்வாறு காது வடிக்கும் பழக்கம் 1980-கள் வரை வழக்கத்தில் இருந்து வந்தது.[1]

பாம்படம் அணிந்த மூதாட்டி
பாம்படம் அணிந்த மூதாட்டி

மேற்கோள்கள் தொகு

  1. சென்னைப்பல்கலைக்கழகம் (1924-1936). Tamil Lexicon. சென்னை: சென்னைப்பல்கலைக்கழகம். பக். 864. http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.2:1:7115.tamillex. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டட்டி&oldid=3449896" இலிருந்து மீள்விக்கப்பட்டது