தண்டியலங்கார உரை

தண்டியலங்கார உரை 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. தண்டியலங்காரம் என்னும் நூல் 12 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. தொல்காப்பியம் உவம இயலில் சொல்லப்பட்ட செய்திகளோடு வடமொழியில் உள்ள அலங்காரச் செய்திகள் இணைக்கப்பட்டு இந்த நூல் உருவாக்கப்பட்டது. இந்த நூலாசிரியர் அணிகளை விளக்கும் நூற்பாக்களை இயற்றி அவற்றை விளக்கும் எடுத்துக்காட்டுப் பாடல்களையும் அவரே பாடித் தண்டியலங்காரம் என்னும் அணிநூலை உருவாக்கியுள்ளார்.[1]

தண்டியலங்கார உரையைப் ‘பழைய உரை’ எனக் குறிப்பிடுகின்றனர். சில பிரதிகளில் சுப்பிரமணிய தேசிகர் உரை என்னும் குறிப்பும் காணப்படுகிறது.

உரையின் பாங்கு

  • இந்த உரை சுருக்கமாகவும், சில இடங்களில் குறிப்புரையாகவும் உள்ளது. அணிகளுக்கு இடையே உள்ள வேற்றுமையை விளக்குகிறது.
  • ”என உரைப்பாரும் உளர்” என இந்த உரை சில இடங்களில் குறிப்பிடுவதால் இந்த உரைக்கு முன்னரும் உரைகள் இருந்தன எனத் தெரிகிறது.
  • நாடக சாதி 10 வகை என்கிறது.
  • ’முத்தரையர் நூல்’ [2] என்று ஒரு நூலை இந்த உரை குறிப்பிடுகிறது
  • சமஸ்கிருதம் புத்தேளிர் மொழி எனவும், பிராகிருதம் இயல்புமொழி எனவும் இந்த உரை குறிப்பிடுகிறது.
  • மா, பலா, பால் மூன்றும் வெவ்வேறு சுவை எனினும் சுவை இனிப்பு. எழுத்துச்செறிவு, சொற்செறிவு, பொருட்செறிவு என்பன வெவ்வேறு ஆயினும் ஒருமித்து வரும் செறிவுகளே.

கருவிநூல்

தொகு

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

தொகு
  1. பிரயோக விவேகம் என்னும் நூலை இயற்றிய சுப்பிரமணிய தீக்கிதர் இதனைக் குறிப்பிடுகிறார்.
  2. முத்தரையர் நூல் தோன்றிய காலம் கி.பி. 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டு எனலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டியலங்கார_உரை&oldid=1881299" இலிருந்து மீள்விக்கப்பட்டது