தண்டு முனிவர்
தண்டு முனிவர் என்பவர் சைவ சமய முழுமுதற் கடவுளான சிவபெருமானின் பக்தராகவும், பரத நாட்டியத்தின் முதல் ஆசானாகவும் கருதப்படுகிறார்.
சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவங்கள் சிவதாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிவபெருமான் தண்டு முனிவருக்கும், பரத முனிவருக்கும் தாண்டவங்களை உருவாக்கி கற்பித்தார் என்று நாட்டிய சாத்திரத்தின் நாலாவது அத்தியாயமான தாண்டவ லட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரதவ முனிவர் நாட்டிய சாத்திரத்தினை சமஸ்கிருத மொழியில் எழுதியுள்ளார். இதனால் பரதரின் பெயரைத் தாங்கி பரதநாட்டியம் என்று அழைக்கப்படுகிறது.
சிவபெருமான் நாட்டியக்கலையை தண்டு முனிவருக்கு கற்பித்தார். தண்டு முனிவர் பரத முனிவருக்கு கற்பத்தார் என்ற கூற்றும் உள்ளது. இதனால் நாட்டியத்தை தாண்டவம் என்கின்றனர். [1]
தண்டு முனிவர் சிவபெருமானுக்கு நடனம் ஆடிக் காட்டுவதைப் போன்ற சிற்பம் பல்லவர் காலத்து மகாபலிபுரம் ரதக் கோயில்களில் உள்ளது. [2][3]
தண்டு முனிவர் யார்
தொகுதண்டு முனிவர் என்பவர் தனித்த மனிதரா அல்லது நந்திகேசுவரரா அல்லது சிவகணங்களின் தலைவரா என்பது குறித்து சை நூலாசிரியர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. அபிநவகுப்தர் என்ற உரையாசிரியர் தண்டு என்ற சொல் நந்திகேசுவரரைக் குறிக்கும் என்கிறார். சார்ங்கதேவர் என்ற மற்றொரு நூலாசிரியர் தமது சங்கீத ரத்னாகரம் என்ற நூலில் பரதருக்கு நிருத்தபிரயோகங்களை தண்டு கற்றுக் கொடுத்தார் என்பதுடன் அவர் சிவகணங்களுக்கு எல்லாம் தலைவர் கணாக்ரனீ என்றும் கூறுகிறார்.