தண்ணீர்ப் பன்னா

மீன் இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Synodus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

தண்ணீர்ப் பன்னா அல்லது தண்டிப்பண்ணா, நாக்கண்டம் ( Inshore lizardfish ) என்பது பெரும்பாலும் மேற்கு அட்லாண்டிக்கில் காணப்படும் சினோடோன்டிடே குடும்பத்தைச் சேர்ந்த மீன் இனம் ஆகும்.[1]

தண்ணீர்ப் பன்னா
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Synodus
இனம்:
இருசொற் பெயரீடு
Synodus foetens
(Linnaeus, 1766)

விளக்கம்

தொகு

தண்ணீர்ப் பண்ணா மீன் அதிகபட்ச நீளமாக சுமார் 50 செ.மீ வரை இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொதுவாக இது சுமார் 40 செ.மீ நீளத்திலேயே காண இயலும். இவற்றின் ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள் வரை இருக்கலாம்.[1] இந்த இன மீனின் உடல் சுருட்டு போல நீண்டுள்ளது.[2] இவை அதிகபட்சமாக 900 கிராம் எடை வரை காணப்படுகின்றன.[1] வளர்ந்த மீன்களில் பொதுவாக ஆணை விட பெண் மீன்கள் பெரியவை.[2] இந்த இன மீன்களின் வாயின் வடிவம் பெரியதாகவும், கூர்மையானதாகவும் இருக்கும். மேல் தாடை கண்ணுக்கு அப்பால் நீண்டுள்ளது. இதன் வாய் மட்டுமல்லாமல் வாய் அண்ணத்திலும் பற்கள் உள்ளன. இதன் உடலில் உள்ள பக்கவாட்டு கோடு குறிப்பிடத்தக்க அடையாளமாக கருதப்படுகிறது.[3] அந்த பக்கவாட்டு கோட்டு நீளத்தில் சுமார் 60 செதில்களைக் கொண்டிருக்கும்.[2] தண்ணீர்ப் பண்ணாவுக்கு முதுகு துடுப்புகள் இல்லை, ஆனால் 10-13 முதுகு மென்கதிர்கள் உண்டு. அதேபோல குத முட்கள் இல்லை, 11-13 குத மென் கதிர்கள் உள்ளன.[3] தண்ணீர்ப் பண்ணா மீனின் முதுகுப் பக்கமானது பழுப்பு நிறத்தில் இருந்து ஆலிவ் நிறம் வரை இருக்கும். வயிற்றுப் பக்கம் வெள்ளை முதல் மஞ்சள் வரை இருக்கும். இளம் மீன்களின் உடலில் கரும் புள்ளிகள் இருக்கும், இந்த புள்ளிகள் இவை வளரும்போது குறைகின்றன/இல்லாமல் போகின்றன.

உணவு

தொகு

தண்ணீர்ப் பண்ணா மீன்கள் பதுங்கியிருந்து வேட்டையாடக்கூடியன. இதன் உணவில் பல்வேறு வகையான மீன்கள் மற்றும் சிறிய முதுகெலும்பற்றவைகளான [1] இறால், நண்டுகள், தலைக்காலிகள் போன்றவை அடங்கும்.[2]

வாழ்விடம்

தொகு
 
புளோரிடா விரிகுடாவில் ஒரு தண்ணீர்ப் பன்னா.

இந்த மீன்களின் வாழ்விடங்களாக ஆழமற்ற கடலடித் தரைப்பகுதிகளாக உள்ளன. சிறுகுடாக்கள், கடல்புற்களுள்ள பகுதிகள், கழிமுகங்கள், விரிகுடாக்கள் போன்ற பொதுவாக மணல் அல்லது மண் தரைப்பகுதியில் காணப்படுகின்றன.[1] பெரிய மீன்கள் கண்ட திட்டுக்கு மேலே திறந்தவெளி கடலிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.[3]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Russell, B., Polanco Fernandez, A., Moore, J. & McEachran, J.D. 2015. Synodus foetens. The IUCN Red List of Threatened Species 2015: e.T16441698A16509727. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2015-4.RLTS.T16441698A16509727.en. Downloaded on 1 May 2017.
  2. 2.0 2.1 2.2 2.3 Harry, Shivrani. "Synodus foetens (Inshore Lizardfish)." The Online Guide to the Animals of Trinidad and Tobago . UWI, 2016. Web. 30 Apr. 2017.
  3. 3.0 3.1 3.2 Robins, C.R. and G.C. Ray, 1986. A field guide to Atlantic coast fishes of North America. Houghton Mifflin Company, Boston, U.S.A. 354 p. (Ref. 7251)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்ணீர்ப்_பன்னா&oldid=3930633" இலிருந்து மீள்விக்கப்பட்டது