தண்ணீர் தொட்டிச்செடி

தண்ணீர் தொட்டிச்செடி

வகைப்பாடு:

தொகு
  1. தாவரவியல் பெயர் : புரோமிலியா Bromelia
  2. குடும்பம் : புரோமிலியேசியீ (Bromeliaceae)

இதரப் பெயர்:

தொகு
  1. தொட்டிச்செடி (Pot Plant)

செடியின் அமைப்பு:

தொகு

[1] இச்செடி மரங்களில் தொற்றுத் தாவரமாக வளர்கிறது. இதற்கு தண்டு மிகச் சிறியது. இலைத் தடிப்பாகவும், ரோஜாப்பூ இதழ் அடுக்கு போலவும் மற்றும் சித்திரப்பூ போலவும் உள்ளது. இவை நடுவில் நீளவாக்கில் குழியுள்ளது. இதன் அடியில் ஒன்றோடு ஒன்று பொருத்தி இருக்கும். இதனால் முழுச்செடியும் புனல் போல் இருக்கும். மரத்தின் உச்சி கிளைகளில் இலைகள் வளர்வதால் இவற்றிற்கு நீர் கிடைப்பதில்லை. அவ்வப்போது மழை மற்றும் பனி பெய்தால் கிடைக்கும் நீரை இத்தாவரங்கள் சேமித்து வைத்துக்கொள்ளும். நிறைந்து இருக்கும் நீரில் யுட்ரிக் குளோரியா போன்ற செடிகளும் வாழ்கிறது. மேலும் இதில் சருகும், புழு பூச்சிகளும் இருக்கும்.

வேரின் சிறப்பு அமைவு:

தொகு

தண்டிலிருந்து வரும் வேர் செடியை மரத்தில் தாங்குவதற்கு மட்டுமே பயன்படும். இவ்வேர்கள் உணவை உறிஞ்சுவது கிடையாது. இலையின் அடிகளிலே செதில் போன்ற சுனைகள் வளர்ந்திருக்கும். இவற்றின் வழியாகப் புனலிலுள்ள நீர் உறிஞ்சப்படுகிறது.

காணப்படும் பகுதி:

தொகு

இச்செடி பிரேசில் நாடுகளில் வளர்கிறது. இவற்றில் இனச்செடிகள் உள்ளன.

மேற்கோள்:

தொகு

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்ணீர்_தொட்டிச்செடி&oldid=4046700" இலிருந்து மீள்விக்கப்பட்டது