தத்தா

சீக்கியர்கள் தங்கள் தாடியை சரிசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு வகையான துணிப் பட்டை

தத்தா (Thatha) என்பது சில சீக்கியர்கள் தங்கள் தாடியை சரிசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு வகையான துணிப் பட்டையாகும். இதை தத்தி என்றும் அழைக்கிறார்கள்.[1] பருத்தி நூலால் ஆன சற்று தடித் இத்துணிப் பட்டைகள் வெள்ளை அல்லது கருப்பு நிறத்தில் சுருக்கம் இல்லாததாகவும் நீடித்து உழைக்கும் வகையிலும் தயாரிக்கப்படுகின்ற்ன. பல மரபுவழி சீக்கியர்கள் தாடியை மரியாதைக்குரிய அடையாளமாகக் கருதி திறந்தநிலை தாடியை வைக்க விரும்புகிறார்கள். ஆனால் சில மேற்கத்திய எண்ணம் கொண்ட மற்றும் நவீன சீக்கியர்கள் நாகரீகம் என்ற பெயரிலும் தோற்றத்திற்காகவும் தாடியைக் கட்டிக் கொள்ள விரும்புகிறார்கள். இதற்காக தாடியில் முடி தெளிப்புகள், தாடி தெளிப்புகள் அல்லது தண்ணீர் மற்றும் எண்ணெய் முதலியவற்றைத் தெளித்து, பின்னர் அதை இரப்பர் அல்லது தாடி கவ்வி கொண்டு கட்டிக் கொள்கிறார்கள். தத்தா அல்லது தத்தி மூலம் தாடியை கன்னத்தில் கட்டிக்கொள்ளும் செயல்முறைக்கு 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை செலவாகிறது.[2]

சீக்கியர்கள் மத்தியில் திறந்த மற்றும் நிலையான தாடி வைத்துக் கொள்வது பற்றிய நடைமுறைகள் விவாதத்திற்கு தகுதியானதாகக் காணப்படவில்லை. குரு கோவிந்த் சிங் சீக்கியர்களை முடியை வெட்டாமல் வைத்திருக்கச் சொன்னார் என்று சில சீக்கியர்கள் வாதிடுகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Singh Trehan, Manjeet (19 July 2018). "Don’t die like a fool on the road...". The Tribune. https://www.tribuneindia.com/news/archive/don%E2%80%99t-die-like-a-fool-on-the-road-622696. பார்த்த நாள்: 21 January 2020. 
  2. McLean, Tanara (5 October 2018). "The lengths one man went to for a beautiful beard". CBC. https://www.cbc.ca/radio/docproject/raising-hair-1.4796906/the-lengths-one-man-went-to-for-a-beautiful-beard-1.4797667. பார்த்த நாள்: 21 January 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்தா&oldid=3656904" இலிருந்து மீள்விக்கப்பட்டது