தத்தாத்ரேய ராமராவ் பார்வதிகர்
தத்தாத்ரேய ராமராவ் பார்வதிகர் (சமஸ்கிருதம்: दत्तात्रेय राम राव् पर्वतिकर्) (காலம்: 1916 -1990) இமையமலையில் அமைந்துள்ள பத்ரிநாத் கோவிலில் வசித்துவந்த இந்திய மெய்யியல் அறிஞரும் வீணைக் கலைஞரும் ஆவார். அவர் ஆன்மீக ஆதரவாளர்களால் வீணை பாபா என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.[1]
தத்தாத்ரேய ராமராவ் பார்வதிகர் | |
---|---|
Parvatikar | |
பிறப்பு | 1916 குலேட்குடா, கருநாடகம் |
இறப்பு | 1990 |
மற்ற பெயர்கள் | வீணை பாபா, நடயோகி, வீணை மஹாராஜ் |
இசை
தொகுஇவர் நட யோகத்தின் விரிவுரையாளரான இவர் இசை மூலம் ஆன்மீகத்தினை பரவச்செய்தார். 1950 இல் ரிஷிகேஷில் நாத யோகா பள்ளியைத் தொடங்கினார்.[1] இவர் இந்திய பாரம்பரிய இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் மற்றும் ருத்ர வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றிருந்தார். இவரது இசை நிகழ்ச்சிகளை 1950 மற்றும் 1955 க்கு இடையில் "அலைன் டேனிலோ" பதிவுசெய்தார். அவை இப்போது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் ஒரு பகுதியாக பாதுகாக்கப்படுகின்றன.[2] அலைன் டேனிலோவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் , யுனெஸ்கோ இந்த ஆல்பத்தை 1997 இல் இந்திய பாரம்பரிய இசையின் தொகுப்பாக மீண்டும் வெளியிட்டது.[3]
ராகவேந்திரா பணி
தொகு1975 இல், தத்தாத்ரேய பர்வதிகர் பெங்களூரில் ஸ்ரீ ராகவேந்திரா மிஷனை நிறுவினார் . அவரது நினைவாக பெங்களூரு கயான் சமாஜ் நகரில் ஒவ்வொரு ஆண்டும் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Nada Yoga Centre". பார்க்கப்பட்ட நாள் 2014-06-06.
- ↑ "UNESCO Collection of Traditional Music of the World". பார்க்கப்பட்ட நாள் 2014-06-06.
- ↑ "Anthology Of Indian Classical Music - A Tribute To Alain Daniélou". 1997. பார்க்கப்பட்ட நாள் 2014-06-06.