தத்துக் கரப்பான்

தத்துக் கரப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
S. montistabularis
இருசொற் பெயரீடு
Saltoblattella montistabularis
Bohn, Picker, Klass & Colville, 2009

தத்துக் கரப்பான் அல்லது பாயும் கரப்பான் (ஆங்கிலம்: Leaproach / Jumping Cockroach ; இலத்தின்: Saltoblattella montistabularis) என்பது தத்துக்கிளியைப் போலத் தாவிச் செல்லக்கூடிய ஒரு கரப்பான் இனம், அதற்கேற்றவாறு இதனது உடல் அமைப்பும் அமைந்துள்ளது.

தாவிச் செல்வதற்கு ஏற்றவாறு தத்துக்கிளியைப் (வெட்டுக்கிளி) போன்று இவற்றின் கால்கள் அமைந்துள்ளன. சாதாரண கரப்பானில் இருந்து மேலும் சில வேறுபாடுகளை இவை கொண்டுள்ளன: ஏனைய கரப்பான்களில் காணப்படும் சிறுநீரக வடிவக் கண்ணிற்குப் பதிலாக இவற்றில் அரைவட்டக் கண்கள் வெளித்தள்ளப்பட்டு, பக்கவாட்டில் காணப்படுகின்றன; தாவும் போது சமநிலையைப் பேணுவதற்கு உணர்கொம்புகளில் மாற்றங்கள் கொண்டுள்ளன.[1]

தென் ஆபிரிக்காவில் கேப் டவுன் எனும் இடத்தில் அமைந்துள்ள மேசை மலைப் பகுதியில் 2009இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றின் சிறப்புத் தோற்றத்தாலும் தத்தும் கரப்பான் என்பதாலும் 2011ம் ஆண்டுக்குரிய சிறந்த பத்து உயரினங்களில் ஒன்றாக இவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "A Jumping Cockroach from South Africa, Saltoblattella montistabularis, gen. nov., spec. nov.(Blattodea: Blattellidae)" (PDF). Arthropod Systematics & Phylogeny. Museum für Tierkunde Dresden. Archived from the original (PDF) on 2011-07-24. பார்க்கப்பட்ட நாள் 2011-05-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்துக்_கரப்பான்&oldid=3557063" இலிருந்து மீள்விக்கப்பட்டது