தத்துவ நிலையம்

தத்துவ நிலையம் என்னும் நூல் தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று.
இது பிள்ளைத் திருநாமம் எனவும் கூறப்படும்.
இது ஒரு பிள்ளைத்தமிழ் நூல்.

  • காலம் 15-ஆம் நூற்றாண்டு.
  • தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர்.
  • சொரூபானந்தரை இந்த நூல் பிள்ளையாகப் பாவித்துப் புகழ்கிறது.

இதில் சைவ நாயன்மார்களின் இயல்புக்கு மாறான செயல்கள் கூறப்படுகின்றன.
ஒரிடத்தில் தம் ஆசிரியரைத் “திருவாதவூர் முனிவ” என அழைக்கிறார் [1]

இதில் எடுத்துக்காட்டுக்காக ஒரு பாடல் [2]

மாதினை வழங்கி நிலநீதி கெட வாழேம்

மடபளியில் மைந்தனை அறுத்திடவும் மாட்டோம்

தாதை நல வேதியன் அவன்தனை வெகுண்டே

தாளை அடி வெட்டுகிலம் நீ இந்

நீதி உடையார் சிலரை என்று உனையும் நின்னுள்

நெக்கு அடியார்தமையும் மிக்க பிழை தேடித்

தீது மொழியேம் எமது சிற்றில் சிதையேலே

சேவடிகளால் எமது சிற்றில் சிதையேலே

கருவிநூல்

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. சிறுதேர்ப் பருவம்.
  2. சீர் நோக்காது, பொருள் புலப்படுமாறு அடிகள் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்துவ_நிலையம்&oldid=1133245" இலிருந்து மீள்விக்கப்பட்டது