தந்தி போவுது தபால் போவுது
தந்தி போவுது தபால் போவுது எனும் இந்த விளையாட்டைச் சிறுவர் சிறுமியர் வட்டமாக உட்கார்ந்து ஆடுவர்.
ஒருவர் பட்டவர். அவருக்குத் தெரியாமல் ஒரு மணியாங்கல் வட்டத்தில் உள்ளவரிடையே கைமாறும். ஒருவர் கையில் கல் தங்கிவிட்டாலும், அவர் அடுத்தவரிடம் கல்லைக் கொடுத்துவிட்டது போல் நடிப்பார். இதனால் மணியாங்கல் யாரிடம் உள்ளது என்பது கல் வைத்திருப்பவரைத் தவிர யாருக்கும் தெரியாது. மூன்று சுற்று கைமாற்றம் நிகழ்வதற்கு முன் பட்டவர் யாரிடம் கல் உள்ளது என்று சொல்லிவிட வேண்டும்.
சொல்லாவிட்டால் பட்டவரைக் குனியவைத்து அவர் முதுகில் ஆளுக்கொரு தட்டு தட்டுவர். சொல்லிவிட்டால் கல் வைத்திருந்தவர் முதுகில் அனைவரும் தட்டுவர். இப்படி ஆட்டம் முடிந்தபின் மீண்டும் புதிதாகப் பட்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த ஆட்டம் தொடரும்.
கல்லைக் கடத்தும்போது எல்லாரும் சேர்ந்து பாட்டுப் பாடுவர்.
- தந்தி போவுது
- தபால் போவுது
திரும்பத் திரும்ப இசையுடன் பாடுவர்.
மேலும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980