தனகில் சுரங்கம்

எத்தியோப்பிய சுரங்கம்

தனகில் சுரங்கம் (Danakil mine) கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் அமைந்துள்ள ஒரு பெரிய பொட்டாசு சுரங்கமாகும். வடகிழக்கு எத்தியோப்பியாவின் அஃபார் மண்டல பாலைவனப் பகுதியில் இச்சுரங்கம் அமைந்துள்ளது. 18% பொட்டாசியம் குளோரைடு சேர்மம் 3.03 பில்லியன் டன்கள் அளவு தாதுவாக இங்குள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவின் மிகப்பெரிய பொட்டாசு கனிம இருப்புக்களில் ஒன்றாக தனகில் சுரங்கம் திகழ்கிறது.[1]

தனகில் சுரங்கம்
Danakil mine
அமைவிடம்
அஃபார் மண்டலம்
நாடுஎத்தியோப்பியா
உற்பத்தி
உற்பத்திகள்Potash

மேற்கோள்கள்

தொகு
  1. "Ethiopian (Danakhil) Potash Project, Afar, Ethiopia". mining-technology.com. 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-06-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனகில்_சுரங்கம்&oldid=3864598" இலிருந்து மீள்விக்கப்பட்டது