தனிமையுணர்வு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தனிமையுணர்வு என்பது சமூக உறவுகளுடனான மனக்கசப்பினால், வெறுமையைத் தோன்றச் செய்யும் ஒரு துன்பமான மன உணர்வு ஆகும். மக்கள் தங்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் மற்றும் பொதுவான பல காரணங்களால் இவ்வுணர்வை அடைவர். உதாரணமாக, சிறு வயதிலும் இளைய பருவத்திலும் தோழமை இன்றி வாடுவது, தனக்கு உதவும் மனிதர்களுக்காக ஏங்குவது போன்றவை இவ்வுணர்வைத் தோற்றுவிக்கலாம். பெரும்பாலானவர்கள் முதல்முறையாகத் தோன்றும் தனிமையுணர்வைத் தங்களின் குழந்தைப் பருவத்திலேயே அடைகின்றனர். தனிமையுணர்வு ஏற்படுவதற்கு, காதல் பிரிவு, திருமணமுறிவு அல்லது நெருங்கியவர்களின் பிரிவு போன்றவை காரணங்களாகும். சில நேரங்களில், பலர் தமக்கு உதவியாய் இருந்தாலும், நெருங்கிய மனிதரின் இறப்பும் தனிமையுணர்வைத் தோற்றுவிக்கும். தனிமையுணர்வைப் போக்க வாழ்வின் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தைப் பெற வேண்டும். கைதிகளைத் தனிச் சிறையில் அடைத்து தனிமையுணர்வை பெறச் செய்யும் முறை முற்காலத்தில் தண்டனையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.