திருவருணைத் தனிவெண்பா

(தனிவெண்பாமாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருவருணைத் தனிவெண்பா என்றும் தனிவெண்பாமாலை என்றும் வழங்கப்படும் [1] தமிழ் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குகை நமச்சிவாயர் இயற்றிய நூல்களில் ஒன்று.[2] அருணை என்பது அண்ணாமலை என்னும் திருவண்ணாமலை.

பாடல் - எடுத்துக்காட்டு

தொகு

(பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது.)

1

வீடு தரும் சோணகிரி வித்தகனார் சத்தியுடன்
நீடு தேர் ஏறி அவர் நிற்கின்றார் - ஓடு
வடம் பிடிக்க வாருங்கள் வந்தவர்க்கு முத்தி
இடம் கிடைக்கும் பாருங்கள் இன்று.

இந்தப் பாடல் பிற்காலத்தில் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் பாடிய பாடலோடு ஒப்புநோக்கத் தக்கது. [3]

2

மானமிலி பொய்யன் மனங்கள் இலாத புத்தி
ஈனன் இவன் என்றும் இகழாதே - ஞான
உருவே அருணகிரி ஓம் நமசிவாய
குருவே எனை ஆண்டு கொள்.

அடிக்குறிப்பு

தொகு
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 165. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. இவர் இயற்றிய அருணகிரி வெண்பா அந்தாதி என்னும் நூல் வேறு.
  3. ஒன்றும் அறியாத ஊமர்காள், தென் அரங்கர்
    இன்று திருத்தேரில் ஏறினார் - நின்று
    வடம் பிடிக்க வாருங்கோள் வைகுந்த நாட்டில்
    இடம் பிடிக்க வேண்டுவீர் இங்கு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவருணைத்_தனிவெண்பா&oldid=1881090" இலிருந்து மீள்விக்கப்பட்டது