தன்னினம் உண்ணுதல்

தன்னினம் உண்ணுதல் (cannibalism) என்பது ஒரு இனம் தன்னுடைய இனத்தைச் சேர்ந்த உறுப்பினரையே உண்ணுவதாகும். இந்த நடத்தை பல்வேறு விலங்குகளில் காணப்படுகிறது. தன்னினம் உண்ணும் நடத்தை சுமார் 1,500 விலங்குகளில் காணப்படுகின்றது. இந்த நடத்தை ஊணுன்னி விலங்குகள் மட்டுமின்றி பல்வேறு தாவரம் உண்ணும் விலங்குகளிடமும் காணப்படுகிறது.[1] மேலும் இந்த நடத்தை நிலத்தில் வாழும் விலங்குகளைக் காட்டிலும் நீரில் வாழும் விலங்குகளில் அதிக அளவில் காணப்படுகிறது.

பெண் இடையன்பூச்சி தன் இணையை உண்ணுதல்
குழாய்மீன்களில் கருவுறும் ஆண்கள் சில கருக்களை உறிஞ்சிக் கொள்கின்றன.

இத்தகைய நடத்தை வெறும் உணவிற்கு மட்டுமின்றி பல்வேறு வேறு சில காரணங்களுக்காகவும் நடக்கின்றது.அவ்வாறு நடக்கும் காரணங்களில் சில

  • உடலுறவு முடிந்த பின் ஆண் பெண்ணையோ அல்லது பெண் ஆணையோ கொன்றுவிடுதல். பூச்சியினங்களில் இத்தகைய தன்னினம் உண்ணும் நடத்தை மிகுதியாக காணப்படுகிறது.[2]
  • ஒரு உயிர்த்தொகையில் உருவ அளவில் பெரிய உறுப்பினர் தன் ஆளுமையைக் காட்டுவதற்காக உருவத்தில் சிறிய உறுப்பினரை கொன்று உண்ணுதல்.[3][4]
  • பிறந்த குட்டியை தாயோ அல்லது அதே குழுவில் உள்ள வேறு சில உறுப்பினரோ கொல்லுதல் அல்லது கொன்று உண்ணுதல். இந்த நடத்தை சிங்கம், பூனை, பன்றி, நாய் போன்ற விலங்குகளில் காணப்படுகிறது.[5][6][7][8]
  • கருவினுள் உருவாகியிருக்கும் பலமான குட்டி, தன்னுடன் உருவாகும் குட்டிகளை கொன்று உண்ணுதல். இந்த நடத்தை ஒரு சில மீன்களில் காணப்படுகிறது.[9]
  • கடற்குதிரைக் குடும்பத்தைச் சேர்ந்த குழாய்மீன் இனத்தில் முட்டைகளை ஆண்கள் தம் உடலுள் சுமக்கின்றன. அவ்வாறு கருவுற்றிருக்கையில் சில கருக்களை தம் உடலுள் உறிஞ்சிக் கொள்வதை ஆய்வர்கள் கண்டறிந்துள்ளனர்.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. Laurel R. Fox, Cannibalism in natural populations. Annual Review of Ecology and Systematics 6, 87-106 (1975).
  2. Mike Maxwell. "Sexual cannibalism, mate choice, and sperm competition in praying mantis". Archived from the original on 2007-12-22. பார்க்கப்பட்ட நாள் 2009-03-23.
  3. G. A. Polis, The evolution and dynamics of intraspecific predation. Annual Review of Ecology and Systematics 12, 225-251 (1981)
  4. V. H. W. Rudolf, Consequences of stage-structured predators: Cannibalism, behavioral effects and trophic cascades. Ecology 88, 2991-3003 (2007)
  5. A. C. Arcadi and R. W. Wrangham, Infanticide in chimpanzees: Review of cases and a new within-group observation from the Kanyawara study group in Kibale National Park. Primates 40 (2), 337-351 (1999).
  6. M. L. Wilson, W. R. Wallauer, and A. E. Pusey, New cases of intergroup violence among chimpanzees in Gombe National Park, Tanzania. International Journal Of Primatology 25 (3), 523-549 (2004).
  7. D. P. Watts, J. C. Mitani, and H. M. Sherrow, New cases of inter-community infanticide by male chimpanzees at Ngogo, Kibale National Park, Uganda. Primates 43 (4), 263-270 (2002)
  8. Hartwell, S, Cats that kill kittens
  9. Crespi, Bernard; Christina Semeniuk (2004). "Parent-Offspring Conflict in the Evolution of Vertebrate Reproductive Mode". The American Naturalist 163 (5): 635–654. doi:10.1086/382734. https://archive.org/details/sim_american-naturalist_2004-05_163_5/page/635. 
  10. Yong, Ed. "Attack of the pregnant cannibal fathers : Not Exactly Rocket Science". Archived from the original on 28 நவம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 5 December 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்னினம்_உண்ணுதல்&oldid=3796715" இலிருந்து மீள்விக்கப்பட்டது