தன்யாசி 8வது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2வது சக்கரத்தின் 2வது மேளமாகிய தோடியின் ஜன்னிய இராகம் ஆகும். காலையில் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ- சம்பூர்ண இராகம் ஆகும்.

இதர அம்சங்கள்

தொகு
 
தன்யாசி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
 
தன்யாசி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ க11 ப நி1 ஸ்
அவரோகணம்: ஸ் நி11 ப ம11 ரி1
 • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க1), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி1), ஆகிய சுரங்கள் வருகின்றன.
 • ஆரோகணத்தில் ரி , த வர்ஜம். இது உபாங்க இராகம் ஆகும்.
 • இந்த இராகத்தின் நிஷாத மூர்ச்சனையே சாலகபைரவி (22) இராகம் ஆகும்.
 • பக்திச் சுவை நிரம்பிய இராகம்.
 • மங்களங்கள் பாடுவதற்கும் வர்ணனைகளுக்கும் ஏற்ற இராகம்.

உருப்படிகள்[1]

தொகு
 1. தானவர்ணம்: "நெனருஞ்சி" - அட - வீணை குப்பய்யர்
 2. கிருதி  : "ஏமகுவபோதிஞ்சரா" - ஆதி - மைசூர் சதாசிவராயர்
 3. கிருதி  : "சங்கீத ஞானமு" - ஆதி - தியாகராஜர்
 4. கிருதி  : "கனக சபாபதி" - ஆதி - கோபாலகிருஷ்ண பாரதியார்
 5. கிருதி  : "காணாமல் வீணிலே" - மிஸ்ரசாபு - முத்துத் தாண்டவர்
 6. கிருதி : "சியாமசுந்தராங்க" - ரூபகம் - தியாகராஜர்
 7. கிருதி : "தியானமே" - ஆதி – முத்துசுவாமி தீட்சிதர்
 8. கிருதி : "பரவதேவதா" - ஆதி - முத்துசுவாமி தீட்சிதர்
 9. கிருதி : "மங்கள தேவதாய" - ரூபகம் - முத்துசுவாமி தீட்சிதர்
 10. கிருதி : "மாயூர நாதம்" - மிச்ரசாபு - முத்துசுவாமி தீட்சிதர்
 11. கிருதி : "நீயே பிழைக்க" - ஆதி - இராமசாமி சிவன்
 12. கிருதி : "வருணமானுமல்ல" - ஆதி - அருணாச்சலக்கவிராயர்
 13. கிருதி : "மீனலோச்சனப்ரேநவ" - மிச்ரசாபு - சியாமா சாஸ்திரி

மேற்கோள்கள்

தொகு
 1. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்யாசி&oldid=2161661" இலிருந்து மீள்விக்கப்பட்டது