தன்வேதனைக்காட்சி

தன்வேதனைக்காட்சி என்பது சித்தாந்தக் கோட்பாட்டில் காட்சி அளவையியலில் பயன்படுத்தப்படும் பதமாகும். மனம், பொறி முதலியவற்றின் உதவியின்றி ஆன்ம ஞானத்தினால் அராகம், வித்தை, கலை முதலிய தத்துவங்களால் உண்டாகும் இன்ப துன்பங்களைப் புரிதலாகும். சிவஞானசித்தியார், "காண்டல் வாயின் மனந்தன்வே தனையோடியோக காட்சியென ஈண்டு நான்காம்"[1]

என்று வாயிற்காட்சி, மானதக்காட்சி, தன்வேதனைக்காட்சி, யோகக்காட்சி எனும் நால்வகைக் காட்சிகளைக் குறிப்பிடுகின்றது.

நான் இன்புறுகின்றேன், நான் மயங்குகின்றேன், நான் கலங்குகின்றேன் போன்ற அறிவுநிலைகள் தன்வேதனைக் காட்சிக்குரிய எளிமையாள உதாரணங்களாகும்.

தன்வேதனைக் காட்சி நிலையில் காட்சியானது அகநிலைப்படுத்தப்பட்ட வகையில் அகச்செயற்பாடுகளைக் கண்டு கொள்ளும் தன்மைக்குரியதாகின்றது.

அடிக்குறிப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்வேதனைக்காட்சி&oldid=2164484" இலிருந்து மீள்விக்கப்பட்டது