தபீர் காவ்
தபீர் காவ் (Tapir Gao) என்பவர் (பிறப்பு 1 அக்டோபர் 1964) அருணாசலப் பிரதேசத்தினை சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தலைவர் ஆவார். இவர் 14வது மக்களவை உறுப்பினராக (2004-2009), கிழக்கு அருணாச்சலம் மக்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் 2009 மற்றும் 2014-ல் இங்குப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். ஆனால் 2019-ல் இரண்டாவது முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காவ் 2011-ல் பாஜகவின் பொதுச் செயலாளராக இருந்தார்.[1] தற்போது[எப்போது?] பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார்.[2]
தபீர் காவ் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
முன்னையவர் | நின்னோங் எரிங் |
தொகுதி | கிழக்கு அருணாச்சலம் |
பதவியில் 2004–2009 | |
முன்னையவர் | வாங்ச்சா ராஜ்குமார்] |
பின்னவர் | நின்னோங் எரிங் |
தொகுதி | கிழக்கு அருணாச்சலம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 அக்டோபர் 1964 மோலோம், அருணாச்சலப் பிரதேசம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | யாமோட் காவ் துய் காவ் |
பிள்ளைகள் | 3 |
வாழிடம் | கிழக்கு சியாங் |
As of 1 மார்ச், 2006 மூலம்: [1] |
பிப்ரவரி 2020-ல், மக்களவையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பல பகுதிகள் இந்தியாவின் அரசியல் வரைபடத்திலிருந்து விடுபட்டுள்ளது என்ற பிரச்சினையை எழுப்பினார்.[3][4] இதில் விடுபட்ட பகுதிகளாக ஹதிக்ரா டகாரு கணவாய், கலாய் டகாரு கணவாய், சாக்லகம் பகுதி உள்ளடங்கும்.[4]
இவர் கிழக்கு சியாங் மாவட்டத்தில் உள்ள இரக்சின் கிராமத்தில் வசிக்கிறார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-01-06. பார்க்கப்பட்ட நாள் 2022-01-17.
- ↑ http://www.bjp.org/organisation/national-executive
- ↑ "MP Tapir Gao bats for new political map of Arunachal Pradesh". EastMojo. 2020-02-05. பார்க்கப்பட்ட நாள் 2021-06-23.
- ↑ 4.0 4.1 "Tapir Gao pleads Centre for redrawing political map to include several places - Sentinelassam". www.sentinelassam.com (in ஆங்கிலம்). 2020-02-06. பார்க்கப்பட்ட நாள் 2021-06-23.
- ↑ "Member's Bioprofile". Archived from the original on 2017-02-07. பார்க்கப்பட்ட நாள் 2022-01-17.