தமரா சிவகோவா

தமரா சிவகோவா (Tamara Sivakova) (பிறப்பு: 1965 ஆகத்து 16) இவர் பெலருசைச் சேர்ந்த இணை ஒலிம்பிக் விளையாட்டின் தடகள வீரராவார். இவர் ஏட்டி எறியும் நிகழ்வுகளில் முக்கியமாக போட்டியிடுகிறார். [1]

ஆரம்ப ஆண்டுகள்

தொகு

பிறவி பிரச்சினை காரணமாக பார்வைக் குறைபாடுள்ள இவர், சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியான பெலருசிலுள்ள ஒருபார்வைக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான பள்ளியில் 14 வயதில் விளையாட்டில் பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கினார். 1989 இல் சூரிக்கில் நடந்த ஐரோப்பியப் போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமானார். 1992 இல் இவர் பார்சிலோனாவில் நடந்த பாராலிம்பிக்கில் ஒருங்கிணைந்த அணியின் பதாகையின் கீழ் பங்கேற்றார். பின்னர், பின்வரும் அனைத்து போட்டிகளிலும் பெலருசிய விளையாட்டு வீரராக பங்கேற்றார். இவர் ஒரு வீசுபவராகவும், ஆரம்பித்து, விரைவில் குண்டு எறிதல், வட்டு எறிதல் போன்ற விளையாட்டுக்குத் திரும்பினார்.

சர்வதேசப் போட்டிகள்

தொகு

யுனிபைடு அணிக்காக எசுப்பானியாவின் பார்செலோனாவில் 1992 கோடைகால இணை ஒலிம்பிக்கில் முதன்முதலில் போட்டியிட்டார். அங்கு பி 3 விளையாட்டு வீரர்களுக்கான வட்டு வீசுதலில் தங்கப்பதக்கம் வென்றார். மேலும், பென்டத்லானில் 5 வது இடத்தைப் பிடித்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பெலருசுக்காக அமெரிக்காவின் அட்லாண்டாவில் 1996 கோடைகால இணை ஒலிம்பிக்கில் போட்டியிட்டார். இதில் இவர் குண்டு எறிதலில் எஃப் 12 வகையில் ஒரு தங்கத்தையும், வட்டு எறிதலில் எஃப் 12 வகையில் வெண்கலத்தையும் வென்றார். ஆனால் மீண்டும் பென்டத்லானில் பதக்கம் பெறத் தவறிவிட்டார்.

2000 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவின் சிட்னியில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் இவர் போட்டியிட்டார். அங்கு இவர் எஃப் 13 வகை வட்டு எறியும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இங்கும் பென்டத்லானில் பதக்கம் பெறத் தவறிவிட்டார். 2004 ஆம் ஆண்டில் கிரேக்கத்தின் ஏதென்ஸில் எஃப் 12 வகை குண்டு எறிதலில் தங்கப் பதக்கத்தையும், எஃப் 13 வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். 2008 ஆம் ஆண்டில் சீனாவின் பெய்ஜிங்கில் தனது ஐந்தாவது இணை ஒலிம்பிக்கில் போட்டியிட்டார். அங்கு முந்தைய ஆட்டங்களின் முடிவுகளை மாற்றியமைத்தார். வென்றார் எஃப் 12/13 வகை வட்டு எறிதலில் தங்கப்பதக்கமும் எஃப் 12/13 வகை குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்

குறிப்புகள்

தொகு
  1. "Sivakova, Tamara". IPC. பார்க்கப்பட்ட நாள் 11 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமரா_சிவகோவா&oldid=3842280" இலிருந்து மீள்விக்கப்பட்டது