தமிழகத்தில் மேலைப் பழங்கற்காலம்
தமிழகத்தில் மேலைப் பழங்கற்காலம் கி.மு. 20,000 முதல் கி.மு. 10,000 வரை நிலைத்திருந்தது.[1] தமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம், மத்திய பழங்கற்காலம் செழித்திருந்த அளவு மேலைப் பழங்கற்காலம் வளரவில்லை என்றாலும் செங்கற்பட்டு குடியம் குகையில் இவைக் காணப்படுகின்றன. ஆனால் மற்ற தென்னிந்திய பகுதிகளில் காணப்படும் அளவுக்கு சிறப்பியல்புகளை கொண்டிருக்கவில்லை. தமிழகத்தில் வாழ்ந்த இக்கால மனிதர்கள் ஒரே கல்லில் பல சமாந்தரமான பக்கங்களையுடைய சிறிய நீள்சதுரங்கள் வரும் அயுதங்களை அமைக்க கற்றுக்கொண்டார்கள்.[2] இவை வட தென்னிந்தியா மற்றும் ஐரோப்பாவில் கிடைக்கும் அளவு செழித்திருக்கவில்லை என்றிருந்தாலும் இதில் மேலாய்வுகள் செய்யப்பட வேண்டியுளது. அதுவரைக்கும் தமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம் தொடர்ந்து இடைக்கற்காலம் திடீரென முளைத்ததாகவே ஆராய்ச்சியாளர்கள் கொண்டிருப்பர்.[1]