தமிழகப் போர்ப் படைகள்
பண்டைய காலத்தில் தமிழகத்தில், தங்களுடைய நாட்டின் எல்லைகளையும் குடிமக்களையும் பாதுகாப்பதற்காக மன்னர்கள் படைகளை வைத்திருந்தனர். இப்படி பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த படைகள்
- பல்தரப் படைகள்
- இருநிலைப் படை
- நான்கு வகைப் படை
- நான்கு வகுப்புப் படை
- ஐந்து உறுப்புப் படை
-என்று அதன் தரம், நிலை, வகை, வகுப்பு, உறுப்பு என்கிற பிரிவுகளின் கீழ் பிரிக்கப் பட்டிருந்தது.
இவை தவிர பண்டையப் படைகளை அதன் அடக்கத்தைக் கொண்டு
- பண்டைய படை வகுப்புப் பெயர்கள்
என்றும் 19 பிரிவுகளாகப் பிரித்து இருக்கின்றனர்.
பல்தரப் படைகள்
தொகுபடைகளை அதனுடைய தர அடிப்படையில் பதினாறு விதமாகப் பிரித்துள்ளனர்.
- மூலப் படை
- உரிமைப் படை
- கூலிப் படை
- துணைப் படை
- அமயப் படை
- வன் படை
- பயிற்சிப் படை
- பயிற்சியில் படை
- குழுப் படை
- தனிப் படை
- கருவி பெறு படை
- தற்கருவிப் படை
- ஊர்திப் படை
- தன் ஊர்திப் படை
- கானப் படை
- பகைவிடு படை
மூலப்படை
தொகுதினமும் பயிற்சி செய்து கொண்டு நெடுங்காலமாக நிலைத்துள்ள சேனையை மூலப்படை என்பர்.
உரிமைப் படை
தொகுமான்யம், உண்பளம் பெற்று அதன் காரணமாகப் போர் நேர்ந்த காலத்தில் அரசனுக்காகப் போரிடும் சேனையை உரிமைப் படை என்பர்.
கூலிப் படை
தொகுபோர்க்காலத்தில் மட்டும் கூலிக்காகப் பணியாற்றும் சேனையை கூலிப் படை என்பர்.
துணைப் படை
தொகுநட்பு காரணமாகப் போரில் உதவும் சேனையை துணைப் படை என்பர்.
அமயப் படை
தொகுஅவசர நிலையில் சேர்க்கப்படும் சேனையை அமயப் படை என்பர். இது புதுப் படை என்பர்.
வன் படை
தொகுநாட்டுப் பற்றால் ஏற்பட்ட மன எழுச்சி காரணமாக அமையும் சேனையை வன் படை என்பர்.
பயிற்சிப் படை
தொகுபோர்ப் பயிற்சி கற்ற சேனையை பயிற்சிப் படை என்பர்.
குழுப் படை
தொகுமன்னன் அமைத்த தலைவனை உடைய சேனையை குழுப் படை என்பர்.
தனிப் படை
தொகுதலைவன் இன்றித் தாமாகவே இயங்கும் சேனையை தனிப் படை என்பர்.
கருவி பெறு படை
தொகுஅரசனால் வழங்கப்படும் போர்க் கருவிகளைப் பெற்று விளங்கும் சேனையை கருவி பெறு படை என்பர்.
தற்கருவிப் படை
தொகுதத்தம் போர்க் கருவிகளைக் கொண்டு போர் செய்யும் சேனை தற்கருவிப் படை என்று என்பர்.
ஊர்திப் படை
தொகுகாவலனால் தரப்பட்ட வாகனங்களில் ஏறிப் போர் புரியும் சேனையை ஊர்திப் படை என்பர்.
தன் ஊர்திப் படை
தொகுதத்தம் வாகனங்களில் ஏறிப் போர் புரியும் சேனையை தன் ஊர்திப் படை என்பர்.
கானப் படை
தொகுவேடர் முதலிய வன மக்களைக் கொண்ட சேனையை கானப் படை என்பர்.
பகை விடு படை
தொகுபகைவனை விட்டு வந்து தானாகக் கூடிய சேனை பகை விடு படை என்பர்.
இருநிலைப் படை
தொகுபடை அதன் நிலை அடிப்படையைக் கொண்டு
- அகப் படை
- மறப் படை
- என்று இரண்டு படைகளாகப் பகுத்துள்ளனர்.
நான்கு வகைப் படை
தொகுபடை அதன் வகையைப் பொறுத்து
- காலாள் படை - தனி நபராகப் போரிடும் படை
- பரிப் படை - குதிரைகளின் மேல் அமர்ந்து சென்று போரிடும் படை
- யானைப் படை - யானைகளின் மேல் அமர்ந்து சென்று போரிடும் படை
- தேர்ப் படை - தேர்களில் அமர்ந்து சென்று போரிடும் படை
-என்று நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
நான்கு வகுப்புப் படை
தொகுபடையை நான்கு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை
- அணி
- உண்டை
- ஒட்டு
- யூகம்
ஐந்து உறுப்புப் படை
தொகுபடையினை ஐந்து உறுப்புகளாகக் கொண்டு பிரித்துள்ளனர். அவை
- தூசி
- கூழை
- நெற்றி
- கை
- அணி
பண்டைய படை வகுப்புப் பெயர்கள்
தொகுபண்டையப் படைகளை 19 பெயர்களில் பிரித்து அதன் அடக்கம், அவற்றில் தேர், யானை, குதிரை காலாள் எத்தனை இருக்க வேண்டும் என்று ஒரு கணக்கும் வைத்திருந்திருக்கின்றனர்.[1]
எண் | பெயர் | அடக்கம் | தேர் | யானை | குதிரை | காலாள் |
---|---|---|---|---|---|---|
1 | பதாதி | ... | 1 | 1 | 3 | 5 |
2 | சேனாமுகம் | 3 பதாதி | 3 | 3 | 9 | 15 |
3 | குமுதம் | 3 சேனாமுகம் | 9 | 9 | 27 | 45 |
4 | கணகம் | 3 குமுதம் | 27 | 27 | 81 | 135 |
5 | வாகினி | 3 கணகம் | 81 | 81 | 243 | 405 |
6 | பிரளயம் | 3 வாகினி | 243 | 243 | 729 | 1215 |
7 | சமுத்திரம் | 3 பிரளயம் | 729 | 729 | 2187 | 3645 |
8 | சங்கம் | 3 சமுத்திரம் | 2187 | 2187 | 6561 | 10935 |
9 | அநீகம் | 3 சங்கம் | 6561 | 6561 | 19683 | 32805 |
10 | அக்கோணி(அக்கோகிணி, அக்ரோணி, அக்குரோணி, அக்ஷௌனி) | 3 அநீகம் | 19683 | 19683 | 59049 | 98415 |
11 | ஏகம் | 8 அக்ரோணி | 157464 | 157464 | 472392 | 787320 |
12 | கோடி | 8 ஏகம் | 1259712 | 1259712 | 3779136 | 6298560 |
13 | மாசங்கம் | 8 கோடி | 10077696 | 10077696 | 30233088 | 50388480 |
14 | விந்தம் | 8 மாசங்கம் | 80621568 | 80621568 | 241864704 | 403107840 |
15 | மாகுமுதம் | 8 விந்தம் | 644972544 | 644972544 | 1934917632 | 3224862720 |
16 | பதுமம் | 8 மாகுமுதம் | 5159780352 | 5159780352 | 15479341056 | 25798901760 |
17 | நாடு | 8 பதுமம் | 41278242816 | 41278242816 | 123834728448 | 206391214080 |
18 | மாகடல் | 8 நாடு | 330225942528 | 330225942528 | 990677827584 | 1651129712640 |
19 | வெள்ளம் | 8 மாகடல் | 2611807510224 | 2611807510224 | 7925422620672 | 13209037701120 |
ஆதாரம்
தொகுமுனைவர் தமிழப்பன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் நூலின் பின் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ள அட்டவணைப் பகுதியில் பக்கம் 9 முதல் 11 வரை.
- ↑ பிங்கல நிகண்டு, 6, 540-558