தமிழரசு (இதழ்)
தமிழரசு 1930 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் மே. மாசிலாமணி முதலியார் ஆவார். இது அன்பே ஆண்டவன் என அறிவித்து, வள்ளலார் குறிப்பு, சங்கீதக்குறிப்பு, சிறுகதை, சிறுவருக்கானவை, நகைச்சுவை, எள்ளல், நாடகம், திரைக்குறிப்பு, விழிப்புணர்வு, விளம்பரம் என பல்சுவைப் படைப்புகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.