தமிழர் திருமணமும் இனமானமும் (நூல்)

தமிழர் திருமணமும் இனமானமும் என்ற நூல் பேராசிரியர் க. அன்பழகன் எழுதிய நூலாகும். இந்நூலை பூம்புகார் பதிப்பகத்தாரால் 1993இல் வெளியிடப்பட்டது.

தமிழர் திருமணமும் இனமானமும்
நூலட்டை
நூலாசிரியர்க. அன்பழகன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வெளியீட்டாளர்பூம்புகார் பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
1993 (முதற்பதிப்பு)
பக்கங்கள்493 (மூன்றாம் பதிப்பு)

நூலின் பொருள்

தொகு

தமிழரின் திருமணங்கள் சங்க காலத்தில் எப்படி நடந்தது என்பது முதல், பிறகு எவ்வாறு அவை மாறின என்றும், சடங்குகளுடன் செய்யப்படும் ஆரிய திருமணமுறையின் பொருத்தமின்மை பற்றியும்,அத்திருமணங்களில் ஓதப்படும் மந்திரங்களில் உள்ள ஆபாசத்தன்மை பற்றியும்,தமிழர் திருமணங்கள் எவ்வாறு நடக்கவேண்டும் என்று விளக்கமாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

நூல் வரலாறு

தொகு

இந்நூல் எதனால் எழுதப்பட்டது என்பதை நூலின் முன்னுரையில் எழுதியுள்ளார்: ஆங்காங்கு எனது திருமண உரையைக் கேட்டுக் கொண்டு மகிழ்ந்த நண்பர் பலர் அந்த உரைகளைத் தொகுத்து வெளியிடுமாறு விரும்பினர். நானும் இசைந்தேன். ஆனால் ஒவ்வொரு திருமணத்திலும் ஆங்காங்கு சூழலுக்கு ஏற்ப பேசுவதாலும், சில செய்திகள் திரும்பத் திரும்ப இடம்பெற நேர்வதாலும், தொகுப்பினும் அது கொள்கை விளக்கும் நோக்கத்தினை நிறைவுசெய்யாது என்பதை உணர்ந்தேன் திருமணங்கள் பலவற்றிற்கு அழைக்கப்படும்போது, அத்திருமணத்திற்கு செல்ல இயலாத நிலை ஏற்படும்போது, என் அன்பார்ந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைத்து மகிழ்கிறேன் என்றாலும் ஒரு திருமணத்தில் பேசக்கூடிய கருத்துக்களை,மணமக்களும் மற்றவரும் அறிந்துகொள்ளச் செய்திட ஏற்றதொரு நூல் பயன்படும் என உள்ளங்கொண்டேன். [1] என இந்நூலை எழுதுவதற்கான காரணத்தை குறிப்பிட்டுளாளார்.

நூலின் நோக்கம்

தொகு

"திருமணங்களில் வைதீக நெறியைக் கைவிட்டுப் புரோகிதரையும்,வடமொழியையும் விலக்கிச் சீர்திருத்த முறையை ஏற்று நடத்துவதன் நோக்கத்தையும், பயனையும் விளக்குவதும்,அப்படிச் செய்வதற்குத் தயங்குபவர்களின் ஐயங்களையும் அச்சங்களையும் போக்குவது இந்நூலின் நோக்கம்" என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

இந்நூலின் உட்பொருள்கள் 39 தலைப்புகளில் விரிவாக இடம்பெற்றுள்ளன.

குறிப்புகள்

தொகு
  1. தமிழர் திருமணமும் இனமானமும், பேராசிரியர் க.அனபழகன். முன்னுரை

வெளியிணைப்புகள்

தொகு