தமிழீழத்தின் குரல் வானொலி

இது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது வானொலியாகும். 11.12.1983 ம் ஆண்டு இந்த வானொலி சிற்றலை வரிசையில் தனது முதலாவது ஒலிபரப்பை இந்தியாவின் தஞ்சை மாவட்டத்திலுள்ள இரகசிய இடமொன்றில் இருந்து ஆரம்பித்தது. தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தால் ஆரம்பிக்கப்பட்ட இந்த வானொலி தனிப்பட்ட ஒரு இயக்க வானொலியாக அல்லாமல் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு பொதுவான வானொலியாக தன்னை பிரகடப்படுத்திக் கொண்டது இதன் சிறப்பம்சமாகும். முதலில் தமிழில் தனது ஒலிபரப்பை ஆரம்பித்த இந்த வானொலி பின்னர் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மொழிகளிலும் அதை விரிவாக்கிக் கொண்டது.

இந்த வானொலியின் பொறுப்பாளராக தற்போது சிவா சின்னப்பொடி என்று அறியப்படும் மூத்த ஊடகவியலாளர் திவாகரன் இருந்தார். 11.12.1985 ல் இந்த வானொலி தனது தனது ஒலிபரப்பை நிறுத்திக்கொண்டது. 1987 ல் விடுதலைப்புலிகள் மீது அவதூறு பரப்புரை செய்வதற்காக இந்திய சிறீலங்கா படையினரின் கூட்டு முயற்சியில் பாலாலி படைத்தளத்தில் இருந்து ஒரு வானொலி ஒலிபரப்பு மேற்கொள்ளப்பட்டது. தற்போது சிலர் தமிழீழத்தின் குரல் வானொலியே இந்த வானொலி என்று தவறாக எண்ணுகின்றனர்.தமிழீழத்தின் குரல் வானொலிக்கும் இந்த வானொலிக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது.