தமிழ்த் தேனீ இரா. மோகன்

தமிழறிஞர்

தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் (1950 - 12, சூன், 2019) என்பவர் ஒரு பேராசிரியர், தமிழறிஞர், தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர், சொற்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர் என பன்முகம் வாய்ந்தவர் ஆவார். இவர் பல்வேறு நூல்களின் தொகுப்பாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பல மாணவர்களுக்கு ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வுக்கு நெறியாளராக இருந்துள்ளார்.

தொழில் தொகு

இரா. மோகன் மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் ஒப்பிலக்கியத்துறை தலைவராக இருந்தார். சாகித்ய அகாதமியின் பொதுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். பல்கலைக்கழகத்திலிருந்து பணி ஓய்வுக்குப் பின் மதுரை காமராசர் பல்கலையின் மதிப்புறு பேராசிரியராக பணியாற்றி வந்தார்.[1]

இவர் பல பட்டிமன்றங்களில் பேச்சாளாராக கலந்துகொண்டுள்ளார். உலக தமிழ் மாநாடு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க மாநாடு உட்படப் பல மாநாடுகள் கருத்தரங்குகளில் சிறப்புரை ஆற்றியுள்ளார்.

பெற்ற விருதுகள் தொகு

  • தமிழக அரசின் கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது
  • மூவேந்தர் இலக்கிய விருது தமிழ்ச்சுடர் விருது
  • தமிழ்ப்பணிச் செம்மல்

இறப்பு தொகு

இவர் 2019 ஜுன் மாதம் தனது 69 வது வயதில் மதுரையில் இறந்தார்.[2]

நூல்கள் நாட்டுடமையாக்கம் தொகு

6, ஏப்ரல், 2023 அன்று தமிழக அரசால் இவரின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு, இவரின் மரபுரிமையாளர்களுக்கு பத்து இலட்சம் தொகை அறிவிக்கபட்டது.[3]

எழுதிய நூல்கள் சில தொகு

  • ஒப்பியல் சிந்தனைகள்
  • தொல்காப்பியம் பொருள்திகாரம்
  • இலக்கியச்செல்வம்
  • உரை மரபுகள்
  • புதுக்கவிதைத் திறன்
  • கணினி யுகத்திற்குத் திருவள்ளுவர்
  • சங்க இலக்கிய சால்பு[4]
  • குலோத்துங்கம் பண்ணையில் கொய்த கதிர்கள் (தொகுப்பாசிரியர்)

மேற்கோள்கள் தொகு

  1. A, Jayashree (2023-04-07). "பரிவுத்தொகை அறிவிக்கப்பட்ட 5 தமிழ் எழுத்தாளார்கள் யார்.. யார்? - அவர்களின் படைப்புகள் என்னென்ன? - முழுவிபரம்". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2023-05-25.
  2. இலக்குவனார் திருவள்ளுவன், முனைவர் இரா.மோகன்பிரியா விடை பெற்றார்! 12 June 2019
  3. "Works of five Tamil scholars will be nationalised: Thangam". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-05-25.
  4. "சங்க இலக்கிய சால்பு ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !". tamilthottam.forumta.net. பார்க்கப்பட்ட நாள் 2023-05-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்த்_தேனீ_இரா._மோகன்&oldid=3724228" இலிருந்து மீள்விக்கப்பட்டது