தமிழ்நாடு அதீத வட்டிவசூல் தடைச் சட்டம் (2003)

தமிழ்நாடு அதீத வட்டிவசூல் தடைச் சட்டம் (2003) மிக அதிக வட்டி வசூலிப்பதை தடை செய்வதற்காக 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி ஆளுநரின் ஆணைக்கிணங்க வெளியிடப்பட்டது[1]. இது ஜூன் மாதம் 9ஆம் தேதியிலிருந்து அமுலுக்கு வந்தது.[2]

தமிழகத்தில் 2003-ல் கந்து வட்டி] தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. கடன் கொடுத்தவர்கள், கடனை திரும்ப வசூலிக்க ஆட்களை கொண்டு அப்பாவிகள் மீது நடத்தப்படும் கராரான கீழ் தர நடவடிக்கையால் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இது போன்ற நிலையை தடுக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.[3]

சட்டம்தொகு

  • வருடத்திற்கு 18 சதவீதத்திற்கு மேல் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது தடை, அதிகபட்ச தண்டனையாக மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ 30,000 அபராதம் பரிந்துரைக்கலாம்.
  • இந்த அவசர சட்டத்தின் கீழ், போலீசார் "மணிநேர வட்டி","கந்து வட்டி", "மீட்டர் வட்டி" மற்றும் "தண்டல்" போன்ற ஆடம்பரமான பெயர்களில் தினமும் வட்டி மற்றும் அபராத வட்டி வசூலிக்கும் வட்டிக்காரர்களுக்கு எதிரான புகார்களை கருத்தில் எடுக்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்தொகு

  1. http://www.idlo.org/MF/DOCUMENTS/REGULATIONS/668.PDF
  2. http://www.dinamani.com/editorial_articles/article628677.ece?service=print
  3. http://tamil.thehindu.com/tamilnadu/கந்து-வட்டி-கொடுமையை-தடுக்க-ஆபரேஷன்-குபேரா-கேரளாவை-போல-தமிழகத்திலும்-செயல்படுத்த-உயர்நீதிமன்றம்-உத்தரவு/article6389234.ece?homepage=true