தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர்களுக்கான திட்டம்
தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர்களுக்கான திட்டம் என்பது தமிழ்நாட்டில் பத்திரிகை நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு தமிழ்நாட்டு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டம் ஆகும்.
செய்தியாளர் அடையாள அட்டை
தொகுஒவ்வொரு பத்திரிகை நிறுவனத்திற்கும் 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர் என்கிற அளவிலும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் 2 செய்தியாளர்கள், 2 ஒளிப்பதிவாளர்கள், 2 ஒளிப்பதிவு உதவியாளர்கள் ஆகியோர்க்குச் செய்தியாளர் அட்டைகள் வழங்கப்படுகின்றன.
பத்திரிகையாளர் அங்கீகார அட்டை
தொகுசென்னையில் ஒரு நாளிதழுக்கு 9 செய்தியாளர்கள், 2 புகைப்படக்காரர்கள் மற்றும் பிற மாவட்டங்களில் 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர் ஆகியோருக்கு பத்திரிகையாளர் அங்கீகார அட்டை வழங்கப்படுகிறது.
பயன்கள்
தொகு- அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்
- ரயில் பயணங்களில் 50 சதவிகித கட்டணச் சலுகை,
- ரயில் பயணங்களில் முன்னுரிமைப் பதிவுகள்
- தொலைபேசி இணைப்புப் பெறுவதில் முன்னுரிமை
- வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு ஒதுக்கீடு[1]
ஆதாரங்கள்
தொகு- ↑ "பத்திரிகையாளர் நலன்". Archived from the original on 2014-03-25. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகத்து 2014.