தமிழ்நாடு அரசின் பன்றி இனப்பெருக்க கொள்கை 2024

தமிழ்நாடு அரசின் பன்றி இனப்பெருக்க கொள்கை, 2024, தமிழ்நாடு அரசு 2021ல் அமைத்த வல்லுனர் குழு, பன்றிகள் இனப்பெருக்க வரைவு கொள்கையை உருவாக்கியது. கடந்த 2022ல் அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட இன்பெருக்க கொள்கையை ஏற்று, 1 அக்டோபர் 2024 அன்று அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது.[1][2][3][4]

கொள்கைகள்

தொகு
  1. அறிவியல் முறைகளை பின்பற்றி, குறைந்த செலவில் பன்றிகளுக்கான தீவனங்கள் உற்பத்தி செய்யப்படும்.
  2. செயற்கை கருவூட்டல் வாயிலாக, மேம்பட்ட வகை பன்றிகளின் இனப்பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
  3. பெரிய வெள்ளை, அயலின பன்றிகளின் இனப்பெருக்க திசுக்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.
  4. வெளிநாடுகளில் இருந்து உயிருள்ள பன்றிகளை இறக்குமதி செய்ய முன்னுரிமை அளிக்கப்படும்
  5. பன்றிகளின் உறைவிக்கப்பட்ட விந்தணு இறக்குமதி குறித்து ஆராயப்படும்.
  6. இனக்கலப்பு முறையில் தனி இன பன்றிகளை உருவாக்க வழிமுறைகள் கையாளப்படும்
  7. பன்றி வளர்ப்புக்கு வங்கிக் கடன், மானியங்கள் வழங்கப்படும்.
  8. சாதாரண பன்றிகளின் மரபணு திறனை மேம்படுத்த, இனக்கலப்பு வழிமுறைகளை பின்பற்றப்படும்.
  9. சாதாரண வகை பன்றி மற்றும் காட்டுப்பன்றிக்கு பதிலாக, வேற்று இன பன்றிகளுடன் இணைந்து கலப்பினங்கள் உருவாக்கப்படும்.

மேற்கோள்கள்

தொகு