தமிழ்நாடு அரசு கம்பிவட தொலைக்காட்சிக் கழகம்

தமிழக அரசு நிறுவனம்

தமிழ்நாடு அரசு கம்பிவட தொலைக்காட்சிக் கழகம் (டி.என்.ஏ.டி.சி.எல்) ( Tamil Nadu Arasu Cable TV Corporation Limited (TNACTCL) என்பது தமிழக அரசாங்கத்தின் கீழ் உள்ள பொதுத் துறை நிறுவனம் ஆகும்.[1]

அரசு கம்பிவட தொலைக்காட்சிக் கழகம் 04.10.2007 அன்று பொதுமக்களுக்கு மலிவு விலையில் உயர்தர கம்பிவட அலைவரிசைகளை வழங்கும் நோக்கத்துடன் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்டது. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய நான்கு இடங்களில் தலைமை அலுவலகங்கள் நிறுவப்பட்டன. மே 2011 இல் தமிழகத்தின் கம்பிவட தொலைக்காட்சி கழகத்தினை புதுப்பிக்கவும் விரிவாக்கவும் ரூ .3 கோடி தமிழக அரசினால் வழங்கப்பட்டது.மேலும் இதற்கு தமிழ்நாடு அரசு கம்பிவட தொலைக்காட்சிக் கழகம் என பெயரிடப்பட்டது.30.8.2011 அன்றைய சட்டமன்ற உரையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கட்டணத் தொகை ரூபாய் 70 என தெரிவிக்கப்பட்டது.

2.9.2011 அன்று வேலூரில் முதல் கம்பிவட தொலைக்காட்சிக் கழகத்தின் தலைமையிடம் துவங்கப்பட்டது. பின் 20.10.2012 முதல் சென்னை நகரப்பகுதிகளுக்கு இந்தச் சேவை வழங்கப்பட்டது. 02.09.2011ல் இந்நிறுவனம் தனது சேவையை தொடங்கியபோது இந்நிறுவனத்தின் சந்தாதாதரர்களின் எண்ணிக்கை 4.94 இலட்சங்கள் என இருந்தது. இந்த எண்ணிக்கை 31.03.2013 அன்றைய நிலவரப்படி 61,54,531 ஆக உள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 137 கட்டணச் சேனல்களின் அலைவரிசைகளை வழங்குகிறது. இந் நிறுவனம் தற்பொழுது இலவச சேனல்கள், கட்டணச் சேனல்கள் மற்றும் உள்ளூர் சேனல்களுடன் சேர்த்து மொத்தம் 90 முதல் 100 சேனல்களை பொது மக்களுக்கு வழங்கி வருகிறது.

தமிழ்நாடு அரசு கம்பிவட தொலைக்காட்சிக் கழகம் வழங்கும் சேவை பொதுமக்கள் மற்றும் கம்பிவட செய்குநர்களின் நலனுக்காககவும் அரசாங்கம் ஏர்படுததப்பட்டுள்ள அமைப்பு ஆகும். இந்த நிறுவனம் சுமார் 1200 உள்ளூர் தொலைககட்சி நிருவனங்களுக்கு ஒலிபரப்புவதற்கான ஒதுக்கீடு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது, அவற்றில் சுமார் 800 தனியார் உள்ளூர் அலைவரிசைகள் தற்போது ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

குறிப்பணிதொகு

குறைந்த சேவையில் உள்ள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசை வழங்குநர்கள் மூலமாக பொதுமக்களுக்கு உயர்தரமான தொலைக்காட்சி சேவைகளை வழங்குதல். மேலும் கம்பிவட தொலைக்காட்சி அலைவரிசைகளின் மூலமாக இணையதள சேவைகளை வழங்குதல். அலைமருவி இணைப்புகளை தவிர்த்து எண்மருவி இணைப்புகளை வழங்குதல். மின் சேவை மையங்களின் மூலமாக பொதுமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்தல் போன்றவைகளாகும்.

நோக்கங்கள்தொகு

டிராயின் வரையின்படி அதிக மக்களை எண்ணருவி அலைவரிகளை பயன்படுத்தச் செய்தல். உள்ளூர் தொலைக்காட்சி செய்குநர்களை பதிவு செய்தல். தாலுகா அலுவலங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுஅவலகங்களில் மின்னனு சேவை மயங்களை ஏற்படுத்துதலின் மூலமாக மக்களுக்குத் தேவைகளை மற்றும் குறைகளை பூர்த்தி செய்தல். அனைத்து வீட்டிற்கும் இணையதள சேவைகளை வழங்குதல்

டிஜிட்டல் மயமாக்கம்தொகு

அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சென்னை மாநகரத்தின் கட்டுப்பாட்டுடன் சேனல்களை வழங்கும் அமைப்பானது மக்களுக்கு பன்முனை அமைப்புகளை வழங்கும் உரிமம் வழங்கியுள்ளது. மத்திய அரசின் கம்பிவடத் தொலைக்காட்சி திருத்தச் சட்டம் 2011-ன்படி நாடு முழுவதும் 31.12.2014க்குள் கம்பிவட சேவைகள் நவீனமயமாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தது.

சான்றுகள்தொகு

  1. ":: Tamil Nadu Arasu Cable TV Corporation Limited ::". www.tactv.in. 2019-10-30 அன்று பார்க்கப்பட்டது.