தமிழ்நாடு தொழில் வர்த்தகச் சங்கம்

TNCCI) மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில் வர்த்தகக் கூட்டமைப்பாகும்

தமிழ்நாடு தொழில் வர்த்தகச் சங்கம் (Tamilnadu Chamber of Commerce and Industry - TNCCI) மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில் வர்த்தகக் கூட்டமைப்பாகும்.

தமிழ்நாடு தொழில் வர்த்தகச் சங்கம்
சுருக்கம்TNCCI
உருவாக்கம்22 சூன் 1926; 98 ஆண்டுகள் முன்னர் (1926-06-22)[1]
வகைஅரசு சார்பற்ற அமைப்பு வர்த்தகச் சங்கம்
சட்ட நிலைசெயல்பாட்டில்
தலைமையகம்மதுரை, இந்தியா
உறுப்பினர்
6500[2]
தலைவர்
என். ஜெகதீசன்
செயலாளர்
ஜெ. செல்வம்
வலைத்தளம்www.tnchamber.in

வரலாறு

தொகு

24 உறுப்பினர்களுடன் 1924-ம் ஆண்டு “மதுரை இராமநாதபுரம் வர்த்தக சங்கம்” (Madurai – Ramnad Chamber of Commerce) என்ற பெயரில் உருவாக்கப்பட்டு, 1926 ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டப்படி பதிவு செய்யப்பட்டது.[2] இதன் செயல்பாடுகள் தமிழகம் முழுக்க விரிவுபடுத்தும் நோக்கில் 1987 ஆம் ஆண்டு “தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[3] இதன் தலைமையகம் மதுரை காமராஜர் சாலையில் உள்ளது. 1951 ஆம் ஆண்டு வெள்ளி விழாவையும், 1975 ஆம் ஆண்டு பொன் விழாவையும், 1985 ஆம் ஆண்டு வைர விழாவையும், 1999 ஆம் ஆண்டு பவள விழாவையும், 2005 ஆம் ஆண்டு முத்து விழாவையும் கொண்டாடியது. இதன் முதுநிலைத் தலைவராக எஸ். ரத்தினவேலு, தலைவராக என். ஜெகதீசன், செயலாளராக ஜெ. செல்வம் ஆகியோர் உள்ளனர்.[4]

செயல்பாடுகள்

தொகு

தென் தமிழக வணிகத் துறையினரின் கோரிக்கைகளையும் தென் தமிழக தொழில் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளையும் மத்திய மாநில அரசுக்கும் வழங்கி, தமிழகத்தின் தொழில், பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். மேலும் தொழில் சட்டவிழிப்புணர்வு, வெளிநாட்டு முதலீடு, பொருளாதார மேம்பாடு தொடர்பாக நிகழ்ச்சிகள் நடத்துதல், ஆண்டு தோறும் தொழில் வர்த்தகப் பொருட்காட்சியை தமுக்கம் மைதானத்தில் நடத்துதல், தொழில் துறையினரின் கருத்துக்களைச் செய்தி ஊடகங்களில் வெளியிடுதல் போன்ற பல பணிகளையும் செய்துவருகிறது.[5]

அமைப்புகள்

தொகு

இதன் சமூகப் பணிகளுக்கென்று தமிழ்நாடு சேம்பர் அறக்கட்டளை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் கீழ் எட்டு அமைப்புகள் உள்ளன.

  1. யெஸ் (Young Entrepreneur School- Yes): இளம் தொழில் முனைவோருக்குத் தேவையான பயிற்சிகளையும், வழிகாட்டுதல்களையும் அளிக்கிறது.[6]
  2. வர்த்தக மேம்பாட்டு மையம் (Business Promotion Centre- BPC):
  3. வீ (Women Entrepreneur – WE): தொழில் முனையும் மகளிர்க்கு மேம்பாட்டுக்கான பயிற்சி அளிக்கிறது.
  4. ஷார்ப் (SHARP): மாணவ மாணவியரின் மென் ஆற்றல்களை வளர்த்தல்.[7]
  5. ஏற்றுமதி மேம்பாட்டு மையம் (Export Promotion Centre – EPC): ஏற்றுமதி மேம்பாட்டு மையம்
  6. வர்த்தக சங்க இசைவுத் தீர்ப்பாயம் (Chamber Arbitration Tribunal – ChaAT): வர்த்தகப் பிணக்குகளைத் தீர்த்தல்.
  7. இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு (Save to be Saved):
  8. உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாத் துறையை வளர்க்கும் அமைப்பு (TOUR-i-ST-Tour in Southern Tamilnadu)

டிஜிட்-ஆல்

தொகு

இதன் தொண்ணூறாவது ஆண்டு விழாவில் மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டு 'டிஜிட்-ஆல்' என்ற கிளை அமைப்பைத் தொடங்கி வைத்தார்.[8] இந்த டிஜிட்-ஆல் அமைப்பின் மூலம் டிஜிட்-ஆல் சங்கமம் என்ற தகவல்தொழில்நுட்ப மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்றுவருகிறது.[9] மேலும் இணைய மற்றும் எண்ணிம விழிப்புணர்வு சார்ந்து பயிற்சிகளும் நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது.[10] டிஜிட்-ஆல் அமைப்பின் தலைவராக ஜே.கே. முத்து உள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "TAMILNADU CHAMBER OF COMMERCE AND INDUSTRY". cleartax. பார்க்கப்பட்ட நாள் 13 February 2021.
  2. 2.0 2.1 "Tamilnadu Chamber Foundation Profile". Young Entrepreneur School. பார்க்கப்பட்ட நாள் 13 February 2021.
  3. "90 வது ஆண்டு நிறைவு விழா". தமிழ்நாடு தொழில் வர்த்தகச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 13 February 2021.
  4. "பெரு நிறுவன வரி ஜிஎஸ்டி மாற்றங்களுக்கு தொழில் வணிக அமைப்புகள் வரவேற்பு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/sep/22/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3239684.html. பார்த்த நாள்: 13 February 2021. 
  5. "மதுரையில் தொழில் வர்த்தக பொருட்காட்சி துவங்கியது". தினமலர். https://www.dinamalar.com/district_detail.asp?id=2204595. பார்த்த நாள்: 13 February 2021. 
  6. "வளரும் தொழில்முனைவர்களுக்கு வழிகாட்டும் ‘யெஸ்’". நாணய விகடன். https://www.vikatan.com/business/investment/140918-yound-entrepreneurs-school-guides. பார்த்த நாள்: 13 February 2021. 
  7. "'இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு விண்வெளி ஆய்வு அவசியம்' : மங்கள்யான் விஞ்ஞானிகள் கருத்து". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=1091980. பார்த்த நாள்: 13 February 2021. 
  8. "தொழில் வர்த்தக சங்க விழா:அப்துல்கலாம் பங்கேற்பு". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 13 February 2021.
  9. "DigitAll Sangamam to be held tomorrow". டைம்ஸ் ஆப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/madurai/digitall-sangamam-to-be-held-tomorrow/articleshow/71640529.cms. பார்த்த நாள்: 13 February 2021. 
  10. "Third edition of Digit-All’s Sangamam on Oct.10". தி இந்து. https://www.thehindu.com/news/cities/Madurai/third-edition-of-digit-alls-sangamam-on-oct10/article32784653.ece. பார்த்த நாள்: 13 February 2021.