தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம்
தமிழ்நாட்டில் இருக்கும் பழங்குடியின மக்கள் அனைவரது சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் தலைவராகவும், அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக 6 அரசு அதிகாரிகளும், அலுவல் சாராத உறுப்பினர்களாக 13 உறுப்பினர்களும் நியமிக்கப்படுவர். இந்த வாரியத்தின் மூலம் பழங்குடியினருக்கான நலத் திட்ட உதவிகள் அளிக்கப்படும்.
இந்த அமைப்பிற்கு பழங்குடியினர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை அளிக்கப்படும். தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியத்தில் சேர்ந்து அடையாள அட்டை பெற்றவர்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி மூலம் இந்த வாரியத்தின் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்படும்.